ADDED : ஜன 12, 2024 04:40 PM
பட்டாம்பூச்சி சிறிய இறக்கையுடன் இருந்தது. அதன் நிறமும் சொல்லும் படியாக இல்லை அதைக்கண்ட வண்ணத்து பூச்சி அதை அலட்சியம் செய்தது. வருத்தத்துடன் இருந்த அதனிடம், நீ ஏன் சிறியதாகவும், நிறம் இல்லாமலும் படைக்கப்பட்டாய் என்பதை விரைவில் தெரிந்து கொள்வாய் என சொல்லி விட்டு மறைந்தார் ஆண்டவர். திடீர் என மழை பெய்தது. பட்டாம்பூச்சி பறந்து சென்று ஒரு மரப்பொந்தில் ஒதுங்கியது. வண்ணத்துப்பூச்சி எங்கும் செல்ல முடியாமல் தத்தளித்தது. மழை நின்றதும் அதனிடம் நலம் விசாரித்தது பட்டாம்பூச்சி.
உருவத்தை கண்டு யாரையும் எடை போடாதீர் என்கிறது பைபிள்.
உருவத்தை கண்டு யாரையும் எடை போடாதீர் என்கிறது பைபிள்.