/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/தர்மபுரி மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி விழாதர்மபுரி மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி விழா
தர்மபுரி மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி விழா
தர்மபுரி மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி விழா
தர்மபுரி மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி விழா
ADDED : ஜன 12, 2024 01:16 PM
தர்மபுரி: அனுமன் ஜெயந்தி விழா, முத்தம்பட்டி வீர ஆஞ்சநேயர், தொப்பூர் ஜெய வீர ஆஞ்சநேயர், தர்மபுரி அபய ஆஞ்சநேயர் கோவில்களில் ஹனுமன் ஜெயந்தி விழா, -16 வகையான அபிஷேகம், சிறப்பு பூஜைகள் நடந்தது. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.
தர்மபுரி, சாலை விநாயகர் கோவில் தெருவில் உள்ள, அபய ஆஞ்சநேயர் கோவிலில் அனுமன் ஜெயந்தியை முன்னிட்டு, ஆஞ்சநேயருக்கு பால், நெய், இளநீர், பழங்கள், சந்தனம், வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடந்தது. பின்னர் வடமாலை, வெற்றிலை மாலை, சாத்தி வெள்ளிக்கவசத்தில் அருள் பாலித்தார்.
* நல்லம்பள்ளி அருகே வனப்பகுதியில் உள்ள முத்தம்பட்டி வீர ஆஞ்சநேயர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடத்தன. ஆப்பிள், துளசி மாலை சாற்றி, ராஜ அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலித்தார்.
* தொப்பூர் கணவாய் மன்றோ குளக்கரை ஜெயவீர ஆஞ்சநேயருக்கு சிறப்பு பூஜை செய்யப்பட்டு வெண்ணெய் காப்பு அலங்காரத்தில் அருள்பாலித்தார்.
கோவில் நிர்வாகம் சார்பில், பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
* அரூர் மாரியம்மன் கோவில் தெருவில் உள்ள, அனுகிரக ஆஞ்சநேயர் கோவிலில், சுவாமிக்கு, 1,008 வடைகளால் மாலை சாற்றப்பட்டு, சிறப்பு பூஜை, மஹா தீபாராதனை நடந்தது. இதே போல், அரூர் பொதுப்பணித்துறை குடியிருப்பில் உள்ள வீர ஆஞ்சநேயர் கோவில், அரூர் வாணீஸ்வரர் கோவிலில் உள்ள ஆஞ்சநேயர், வாசவி கன்னிகா பரமேஸ்வரி தேவஸ்தானத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோவில், தீர்த்தமலை, மொரப்பூர், தென்கரைகோட்டை வீரசஞ்சிவராமசாமி கோவில் உள்ளிட்ட இடங்களில், அனுமன் ஜெயந்தி விழா விமர்சையாக நடந்தது.