/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பணியில் இறந்தவர் மனைவிக்கு வேலை வழங்ககோரி ஆர்ப்பாட்டம் பணியில் இறந்தவர் மனைவிக்கு வேலை வழங்ககோரி ஆர்ப்பாட்டம்
பணியில் இறந்தவர் மனைவிக்கு வேலை வழங்ககோரி ஆர்ப்பாட்டம்
பணியில் இறந்தவர் மனைவிக்கு வேலை வழங்ககோரி ஆர்ப்பாட்டம்
பணியில் இறந்தவர் மனைவிக்கு வேலை வழங்ககோரி ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூன் 01, 2024 02:05 AM
நல்லம்பள்ளி:பணியில் இறந்த, டேங்க் ஆப்ரேட்டர் மனைவிக்கு, வேலை வழங்க கோரி, நாகர்கூடல் பஞ்., அலுவலகம் முன், மேல்நிலை நீர்தேக்கதொட்டி இயக்குபவர் மற்றும் தூய்மை பணியாளர்கள் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி ஒன்றியம், நாகர்கூடல் பஞ்.,க்கு உட்பட்ட கூலிகொட்டாயை சேர்ந்த கோவிந்தன், 50. மாற்றுத்திறனாளியான இவர் கடந்த, 30 ஆண்டுகளாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆப்ரேட்டராக வேலை செய்து வந்தார். கடந்த ஆண்டு டிச.,3ல் கோவிந்தன் இறந்தார். பஞ்., நிர்வாக அனுமதியுடன் அவரது மனைவி வேங்கம்மாள், 40, சில நாட்கள் தண்ணீர் திறந்து விடும் பணிகளில் ஈடுபட்டார். அதற்குள் வேறு ஒரு நபருக்கு பணி வழங்குவதாக பஞ்., நிர்வாகம் சார்பில் தெரிவித்துள்ளனர். கோவிந்தன் இறந்த பின், அவருடைய சம்பள நிலுவைத் தொகை, ஈமச்சடங்கு செலவு, இன்சூரன்ஸ் உள்ளிட்டவற்றை பஞ்., நிர்வாகம் வழங்கவில்லை.
மேலும், அவரது மனைவிக்கு வேலையும் வழங்காகதை கண்டித்து, தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி ஆபரேட்டர்கள் மற்றும் துாய்மை பணியாளர்கள், துாய்மை காவலர்கள் சங்கம் சார்பில், மாநில தலைவர் கிருஷ்ணன் தலைமையில், நாகர்கூடல் பஞ்., அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.