/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி விழாராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி விழா
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி விழா
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி விழா
ராமநாதபுரம் மாவட்டத்தில் அனுமன் ஜெயந்தி விழா
ADDED : ஜன 12, 2024 12:31 AM

ராமநாதபுரம் : ராமநாதபுரத்தில் உள்ள ஆஞ்சநேயர் கோயில்களில் அனுமன் ஜெயந்தி விழாவில் சுவாமிக்கு அபிஷேகம் அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது.
நேற்று மார்கழி மூல நட்சத்திரத்தில் ஆஞ்சநேயர் ஜெயந்தியை முன்னிட்டு ராமநாதபுரம் அரண்மனை பால ஆஞ்சநேயர் கோயில், கேதாண்டராமர் கோயிலில் உள்ள ஆஞ்சநேயருக்கு அபிேஷகம், அலங்காரம், தீபாரதனை நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. துளசி மாலை, வெற்றிலை மாலை, வடைமாலை சாற்றி ஏராளமான பக்தர்கள் வழிபட்டனர்.
இதே போல பட்டணம்காத்தான் ஆதிஜோதி ராஜபத்திரகாளியம்மன் கோயிலில் அலங்காரத்தில் ஆஞ்சநேயர் அருள்பாலித்தார். வெளிப்பட்டணம் முத்தாலம்மன் கோயில் வளாகத்தில் அலங்காரத்தில் ஆஞ்சநேயர், முகவை ஊருணி தென்கரையில் உள்ள பாலஆஞ்சநேயர் கோயில் ஆகிய இடங்களில் அபிேஷகம் அலங்காரத்தில் பூஜைகள் நடந்தது.
*பரமக்குடி நகராட்சி எதிரில் உள்ள அனுமார் கோதண்டராமசாமி கோயிலில் அனுமன் புனித புளி ஆஞ்சநேயராக புளிய மரத்தில் அருள்பாலிக்கிறார். இக்கோயிலில் அனுமன் ஜெயந்தி விழாவையொட்டி தினமும் பல்வேறு அலங்காரங்களில் வீதி உலா வந்தார்.
நேற்று முன்தினம் இரவு பரமபத நாதனாக அருள்பாலித்தார். நேற்று காலை முதல் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன. பக்தர்கள் 11 முதல் 1008 முறை கோயிலை வலம் வந்து தரிசனம் செய்தனர்.
பரமக்குடி பஞ்சமுக ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று முன்தினம் சிறப்பு அபிஷேகம் நடந்தது. பழங்களால் மூலவர் பஞ்சமுக ஆஞ்சநேயர் அருள் பாலித்தார். நேற்று காலை சிறப்பு ஹோமங்கள் நடந்து உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து அன்னதானம் வழங்கப்பட்டது.
பரமக்குடி சுந்தர் நகர் வீர ஆஞ்சநேயர் கோயிலில் பக்தர்கள் பால்குடம் எடுத்தனர். பின்னர் அபிஷேகம் நிறைவடைந்து தீபாராதனைகளுக்கு பின் அன்னதானம் வழங்கப்பட்டது.
பரமக்குடி காக்கா தோப்பு பால ஆஞ்சநேயருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. எமனேஸ்வரம் ஆஞ்சநேயர் கோயிலில் நேற்று காலை மூலவர் உற்ஸவருக்கு சிறப்பு அபிஷேகங்கள் நடத்தப்பட்டன.
* ரெகுநாதபுரம் அருகே காரான் ஊராட்சி மருங்கூர் அய்யனார் கோயில் வளாகத்தில் வீர ஆஞ்சநேயர் சன்னதியில் நேற்று காலை 10:00 மணிக்கு மூலவர் வீர ஆஞ்சநேயருக்கு 16 வகை சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நிறைவேற்றப்பட்டது. வெண்ணெய் மற்றும் வெற்றிலை மாலை சாற்றப்பட்டது.
சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
ஏற்பாடுகளை காரான் கிராம பொதுமக்கள் மற்றும் குலதெய்வ வழிபாட்டாளர்கள் செய்திருந்தனர்.