/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/சிவகங்கை, சிங்கம்புணரியில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்சிவகங்கை, சிங்கம்புணரியில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை, சிங்கம்புணரியில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை, சிங்கம்புணரியில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
சிவகங்கை, சிங்கம்புணரியில் ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 12, 2024 12:30 AM

சிங்கம்புணரி: சிங்கம்புணரியில் தொடக்கக்கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கை குழுவான டிட்டோ ஜாக் சார்பில் அரசாணை 243க்கு எதிரான ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்டார ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் ஆரோக்கியராஜ் தலைமை வகித்தார். மாநில பொதுக்குழு உறுப்பினர் ஞான அற்புதராஜ், கல்வி மாவட்ட தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தனர். டிட்டோஜாக் மாவட்ட ஒருங்கிணைப்பாளர், தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்ட செயலாளர் முத்துப்பாண்டியன் பேசியதாவது, அரசாணை 243 வெளியிட்டதால் தொடக்கக் கல்வித் துறையில் 90 சதவீத ஆசிரியர்கள் பதவி உயர்வு வாய்ப்பை இழந்துள்ளனர். கடந்த அக். 12ம் தேதி சென்னையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சருடன் நடத்திய பேச்சு வார்த்தையில் எங்கள் கூட்டமைப்பின் 30 கோரிக்கைகளில் 12 ஐ ஏற்றுக்கொண்டனர். ஆனால் ஒன்றை கூட நிறைவேற்றவில்லை. இந்த அரசாணை நிர்வாக சீர்கேட்டிற்கு வழி வகுக்கும். எனவே 243 அரசாணையை ரத்து செய்ய வேண்டும், என்றார். ஆர்ப்பாட்டத்தில் வட்டாரப் பொருளாளர் சிலம்பாயி, மாவட்ட பொதுக்குழு உறுப்பினர்கள் மகாராஜா, கீதா, ஞானவிநாயகன் பங்கேற்றனர்.
* சிவகங்கை வட்டாரக்கல்வி அலுவலகம் முன்பு தமிழ்நாடு தொடக்கக் கல்வி ஆசிரியர் இயக்கங்களின் கூட்டு நடவடிக்கைக்குழு டிட்டோஜாக் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. ஒருங்கிணைப்பாளர் கணேசன் தலைமை வகித்தார். ஒருங்கிணைப்பாளர் வேல்முருகன் வரவேற்றார். ஒருங்கிணைப்பாளர்கள் கோவிந்தராஜ், ஜெயகுமார், குமரேசன், சசிக்குமார், சுந்தரேஷ்வரன், பிரபாகரன், பாண்டியராஜன் கலந்து கொண்டனர். அரசாணை 243யை ரத்து செய்திட வலியுறுத்தியும். டிட்டோஜாக் பேரமைப்பு 30 அம்ச கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டம் நடந்தது.