ரூ.35 ஆயிரம் லஞ்சம்: வனத்துறை அலுவலர்கள் இருவர் கைது
ரூ.35 ஆயிரம் லஞ்சம்: வனத்துறை அலுவலர்கள் இருவர் கைது
ரூ.35 ஆயிரம் லஞ்சம்: வனத்துறை அலுவலர்கள் இருவர் கைது
ADDED : மார் 26, 2025 07:39 AM

பாலக்காடு: பாலக்காடு அருகே, லஞ்சம் வாங்கிய வனத்துறை ஊழியர்கள் இருவரை லஞ்ச ஒழிப்பு போலீசார், கையும் களவுமாக கைது செய்தனர்.
கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், கடம்பழிப்புரம் பகுதியைச் சேர்ந்தவர், வன எல்லையோடு சேர்ந்திருக்கும் தன் நிலத்திற்கு ஆட்சேபனை இல்லை சான்றிதழ் (என்.ஓ.சி.,) கேட்டு, கடம்பழிப்புரம் வனச்சரக அலுவலகத்தில் விண்ணப்பம் அளித்தார். சான்றிதழ் வேண்டுமானால், 35 ஆயிரம் ரூபாய் லஞ்சமாக, கொடுக்க வேண்டும் என, வன அளவையர் பிராங்கிளின் ஜார்ஜ், 50, வனத்துறை ஊழியர் சுஜித், 28, ஆகியோர் கூறியுள்ளனர்.
லஞ்சம் கொடுத்து, என்.ஓ.சி., வாங்க மனமில்லாத அவர், மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை அலுவலகத்தில் இது குறித்து புகார் அளித்தார். லஞ்ச ஒழிப்புத்துறையின் அறிவுரையின்படி அவர், நேற்று காலை அலுவலகத்திற்கு சென்று வனத்துறை ஊழியர்களிடம் பணத்தை வழங்கினார்.
லஞ்ச பணத்தை வழங்கிய போது, டி.எஸ்.பி., சம்சுதீனின் தலைமையிலான, லஞ்சு ஒழிப்பு போலீசார், அவர்கள் இருவரையும் கையும் களவுமாக பிடித்தனர். கைது செய்யப்பட்ட இருவரும், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டனர்.