/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ., தீர்வு கண்ட அமைச்சர் முத்துசாமிமறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ., தீர்வு கண்ட அமைச்சர் முத்துசாமி
மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ., தீர்வு கண்ட அமைச்சர் முத்துசாமி
மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ., தீர்வு கண்ட அமைச்சர் முத்துசாமி
மறியலில் ஈடுபட்ட எம்.எல்.ஏ., தீர்வு கண்ட அமைச்சர் முத்துசாமி
ADDED : ஜன 12, 2024 01:30 PM
பெருந்துறை: பெருந்துறையில் எம்.எல்.ஏ., தலைமையில் மறியல் நடந்தது. அமைச்சர் முத்துசாமி சமாதானம் பேசி தீர்வு கண்டார்.
பெருந்துறை ஊராட்சி ஒன்றியம், திருவாச்சி ஊராட்சி அரசு உயர்நிலைப் பள்ளியில் வளாகத்தில், நவ., 21ம் தேதி பெய்த கனமழையால் வகுப்பறைக்குள் மழை நீர் புகுந்தது. இதனால் பள்ளி முன்புள்ள கசிவுநீர் குழாயை சரி செய்ய, திருவாச்சி ஊராட்சி நிர்வாகம் மற்றும் கலெக்டரிடம் தகவல் தெரிவித்தும் சரி செய்யப்படவில்லை.
இந்நிலையில் கசிவுநீர் குழாயை சரி செய்ய, பெருந்துறை எம்.எல்.ஏ., ஜெயகுமார் அறிவுறுத்தலின்படி, பெருந்துறை யூனியன் சாந்தி ஜெயராஜ், நேற்று பணியை தொடங்கினார். ஆனால், பணியை செய்ய விடாமல் ஊராட்சி நிர்வாகம் தடுத்துள்ளது.
இதனால் அங்கு எம்.எல்.ஏ., ஜெயகுமார், பெருந்துறை ஒன்றிய அ.தி.மு.க.,வினர், ஊர்மக்கள் திரண்டனர். கசிவுநீர் குழாயை சீரமைக்க அனுமதி கோரி, தேசிய நெடுஞ்சாலையில், வாவிக்கடையில் சர்வீஸ் ரோட்டில் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதித்தது. தகவலறிந்து அமைச்சர் முத்துசாமி சென்றார். மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். இதையடுத்து இரவு, 9:௦௦ மணிக்கு கசிவுநீர் குழாயை சரி செய்யும் பணியை தொடங்கி வைத்து, போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தார். இதையடுத்து மறியலில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர்.