/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலம்: 2 ஆண்டு கழித்து கடன் வழங்க முடியாது என தெரிவித்த பைனான்சுக்கு ரூ.25,000 அபராதம்ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலம்: 2 ஆண்டு கழித்து கடன் வழங்க முடியாது என தெரிவித்த பைனான்சுக்கு ரூ.25,000 அபராதம்
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலம்: 2 ஆண்டு கழித்து கடன் வழங்க முடியாது என தெரிவித்த பைனான்சுக்கு ரூ.25,000 அபராதம்
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலம்: 2 ஆண்டு கழித்து கடன் வழங்க முடியாது என தெரிவித்த பைனான்சுக்கு ரூ.25,000 அபராதம்
ஆஞ்சநேயர் ஜெயந்தி விழா கோலாகலம்: 2 ஆண்டு கழித்து கடன் வழங்க முடியாது என தெரிவித்த பைனான்சுக்கு ரூ.25,000 அபராதம்
ADDED : ஜன 12, 2024 01:43 PM
நாமக்கல்: 'கடன் வழங்க முடியாது' என, 2 ஆண்டுகள் கழித்து தெரிவித்த ஹோம் பைனான்சுக்கு, 25,000 ரூபாய் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டது.
நாமக்கல் அடுத்த வேலகவுண்டம்பட்டி அருகே, கொத்துாரை சேர்ந்தவர் ராமசாமி மகன் முருகேசன், 46. இவர் மைசூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் புதிதாக வேலைக்கு சேர்ந்துள்ளார். கடந்த, 2019 ஜன.,ல் மைசூரில் உள்ள, ஐ.சி.ஐ.சி.ஐ., ஹோம் பைனான்ஸ் கிளை மேலாளரை அணுகி, நிலம் வாங்குவதற்கு கடன் கேட்டு விண்ணப்பித்தார். கடன் வழங்குவதாக கூறி ஆவணங்களை கையாள்வதற்கான கட்டணம், 3,540 ரூபாயை செலுத்துமாறு மேலாளர் தெரிவித்துள்ளார். இந்த பணத்தை செலுத்தியதுடன், மேலாளர் கேட்ட அனைத்து ஆவணங்களையும் கொடுத்துவிட்டார். ஆனால், 2019 ஏப்ரலில், வங்கி மேலாளர், புதிய வங்கி விதிமுறைப்படி கடன் வழங்க முடியவில்லை என, முருகேசனிடம் தெரிவித்துள்ளார்.
இதனை எழுத்துப்பூர்வமாக கேட்டபோது, பைனான்ஸ் நிறுவனம் வழங்க மறுத்துவிட்டது. செலுத்திய தொகையை கேட்டதற்கும் திரும்ப தரவில்லை. இதையடுத்து, மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில், முருகேசன் வழக்கு தொடுத்தார்.
விசாரணை முடிந்த நிலையில், நேற்று நுகர்வோர் நீதிமன்ற நீதிபதி ராமராஜ், உறுப்பினர் ரமோலா ஆகியோர் தீர்ப்பளித்தனர். அதில், ஒருவருக்கு கடன் வழங்குவதும், வழங்காததும் நிறுவனத்தின் விருப்பம் என்பதால், கடன் வழங்காததை சேவை குறைபாடு என கூற முடியாது.
ஆனால், கடன் விண்ணப்பத்தையும், கட்டணத்தையும் பெற்றுக்கொண்டு, 2 ஆண்டுகள் கழித்து கடன் வழங்க இயலாது என, நிறுவனம் கூறுவது சேவை குறைபாடு. அதனால், முருகேசன் செலுத்திய கட்டணம், 2,000 ரூபாய், சேவை குறைபாட்டிற்கான இழப்பீடாக, 25,000 ரூபாயும் வழக்கு தாக்கல் செய்தவருக்கு, 4 வாரங்களுக்குள், ஹோம் பைனான்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும் என, உத்தரவிட்டுள்ளனர்.