/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/மரக்காணம் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்மரக்காணம் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்
மரக்காணம் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்
மரக்காணம் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்
மரக்காணம் கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய மீன்கள்
ADDED : ஜன 11, 2024 11:50 PM

மரக்காணம்: மரக்காணம் கடற்கரையோரம் 10 கி.மீ., துாரம் வரை ஏராளமான மீன்கள் செத்து கரை ஒதுங்கின.
விழுப்புரம் மாவட்டம், மரக்காணம் பகுதியில் சில தினங்களுக்கு முன் பெய்த கனமழையால் 100க்கும் மேற்பட்ட ஏரி, குளம் உள்ளிட்ட நீர் நிலைகள் நிரம்பி உபரி நீர் கழுவெளி ஏரியில் கலந்தது.
இதனால் கழுவெளி ஏரியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கிராமங்களிலும் விவசாய நிலத்திலும் மழைநீர் புகுந்து பெரும் சேதத்தை ஏற்படுத்தியது.
மேலும், கழுவெளி ஏரியில் உள்ள நீரின் அளவை குறைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் கழுவெளி ஏறி மற்றும் பக்கிங்காம் கால்வாய் நடுவில் உள்ள தடுப்பணையை கடந்த இரு தினங்களுக்கு முன் திறந்தனர்.
இதனால் கழுவெளியில் தேங்கி நின்ற தண்ணீர் பக்கிங்காம் கால்வாய் வழியாக சென்று கடலில் கலந்தது.
அப்போது, கழுவெளி ஏரியில் இருந்த லட்சக்கணக்காண ஜிலேபி வகை மீன்கள் பக்கிங்காம் கால்வாய் வழியாக கடலுக்குள் சென்றன.
நன்னீரில் வளர்ந்த மீன்கள் உப்பு நீரில் சென்றதால் மீன்கள் அனைத்தும் இறந்து மரக்காணம், கோட்டக்குப்பம் பகுதி கடற்கரையில் 10 கி.மீ., துாரம் வரை கரை ஒதுங்கின.
இறந்த மீன்கள் அப்புறப்படுத்தப்படாததால் அப்பகுதியில் துர்நாற்றம் வீசியது.