ADDED : ஜன 12, 2024 12:11 AM
சிங்கம்புணரி : சிங்கம்புணரி அருகே எருமைப்பட்டி அரசு நடுநிலைப் பள்ளியில் சமத்துவ பொங்கல் விழா நடந்தது. தலைமை ஆசிரியர் கலைமதி தலைமை வகித்தார். பட்டதாரி ஆசிரியர்கள் கீதா, மேரிபிரபா, இடைநிலை ஆசிரியர்கள் பிரேம்குமார், ஞான விநாயகன், பெற்றோர்கள் பங்கேற்றனர்.
மாணவர்கள் கலாசார உடை அணிந்து பள்ளிக்கு வந்திருந்தனர். விளையாட்டுப் போட்டி நடத்தப்பட்டு பரிசு வழங்கப்பட்டன. பள்ளி முன் பொங்கல் வைத்து அனைவருக்கும் வழங்கப்பட்டது.