/உள்ளூர் செய்திகள்/சென்னை/௶'திருப்புகழ்' பரிந்துரை பணிகள் அரசிடம் மாநகராட்சி அறிக்கை௶'திருப்புகழ்' பரிந்துரை பணிகள் அரசிடம் மாநகராட்சி அறிக்கை
௶'திருப்புகழ்' பரிந்துரை பணிகள் அரசிடம் மாநகராட்சி அறிக்கை
௶'திருப்புகழ்' பரிந்துரை பணிகள் அரசிடம் மாநகராட்சி அறிக்கை
௶'திருப்புகழ்' பரிந்துரை பணிகள் அரசிடம் மாநகராட்சி அறிக்கை
ADDED : ஜன 12, 2024 12:54 AM
சென்னை,சென்னை மற்றும் புறநகர் பகுதியில், 'மிக்ஜாம்' மழைநீர் தேக்கத்திற்கான காரணம் மற்றும் திருப்புகழ் கமிட்டி பரிந்துரையின்படி மேற்கொள்ளப்பட்ட மழைக்கால முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, சென்னை மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, நீர்வளத்துறை உள்ளிட்டவை அறிக்கை அளிக்கும்படி அரசு உத்தரவிட்டிருந்தது.
தொடர்ந்து, அத்துறைகள் சார்ந்த அறிக்கையை ஒருங்கிணைத்து, சென்னை மாநகராட்சி தமிழக அரசிடம் சமர்ப்பித்துள்ளது.
மாநகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:
திருப்புகழ் கமிட்டி பரிந்துரைப்படி, மாநகராட்சி இணை கமிஷனர் தலைமையில் ஒருங்கிணைப்பு குழு ஏற்படுத்தப்பட்டு, பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தற்போதைய அறிக்கையில், பகுதி வாரியாக நீர் தேங்கியதற்கான காரணம், அப்பகுதியில் பெய்த மழை அளவு உள்ளிட்டவை இடம் பெற்றுள்ளது.
மேலும், மாநகராட்சி, நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை மற்றும் நீர்வளத்துறை ஆகியவை மேற்கொள்ள தவறிய முன்னேற்பாடு பணிகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில், கூவம், அடையாறு, பகிங்ஹாம், கொசஸ்தலை மற்றும் கிளை கால்வாய்களில் உள்ள ஆக்கிரமிப்புகள், அதில் உள்ள கழிவுகள் குறித்தும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கான, முழுமையான அறிக்கை குறித்த விபரங்களை தமிழக அரசு விரைவில் வெளியிடும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.