/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/மண்டல விளையாட்டு; அசத்திய மாணவர்கள்மண்டல விளையாட்டு; அசத்திய மாணவர்கள்
மண்டல விளையாட்டு; அசத்திய மாணவர்கள்
மண்டல விளையாட்டு; அசத்திய மாணவர்கள்
மண்டல விளையாட்டு; அசத்திய மாணவர்கள்
ADDED : ஜன 11, 2024 11:37 PM

கோவை:தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கான இன்டர் பாலிடெக்னிக் அதலெடிக் அசோசியேஷன் (ஐ.பி.ஏ.ஏ.,) சார்பில் பாலிடெக்னிக் மாணவர்களுக்கு மண்டல அளவிலான கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ், இறகுப்பந்து போட்டி பி.எஸ்.ஜி., பாலிடெக்னிக் கல்லுாரி சார்பில் நேற்று நடந்தது.
போட்டியை பி.எஸ்.ஜி., கல்லுாரியின் முதல்வர் கிரிராஜ் துவக்கி வைத்தார். கூடைப்பந்து மற்றும் இறகுப்பந்து போட்டிகளில் தலா எட்டு அணிகளும், டேபிள் டென்னிஸ் போட்டியில் ஏழு அணிகளும் பங்கேற்றன.
நேற்று நடந்த கூடைப்பந்து அரையிறுதிப்போட்டியில் பி.எஸ்.ஜி., கல்லுாரி அணி 34 - 24 என்ற புள்ளிக்கணக்கில் நஞ்சை லிங்கம்மாள் கல்லுாரியையும், நாச்சிமுத்து பாலிடெக்னிக் கல்லுாரி அணி 35 - 29 என்ற புள்ளிக்கணக்கில் அரசு பாலிடெக்னிக் கல்லுாரியையும் வீழ்த்தின.