/உள்ளூர் செய்திகள்/தேனி/உயிர் உர உற்பத்தி இலக்கை எட்ட முடியாமல் திணறல்; இதுவரை 50 சதவீத அளவே உற்பத்தியானதுஉயிர் உர உற்பத்தி இலக்கை எட்ட முடியாமல் திணறல்; இதுவரை 50 சதவீத அளவே உற்பத்தியானது
உயிர் உர உற்பத்தி இலக்கை எட்ட முடியாமல் திணறல்; இதுவரை 50 சதவீத அளவே உற்பத்தியானது
உயிர் உர உற்பத்தி இலக்கை எட்ட முடியாமல் திணறல்; இதுவரை 50 சதவீத அளவே உற்பத்தியானது
உயிர் உர உற்பத்தி இலக்கை எட்ட முடியாமல் திணறல்; இதுவரை 50 சதவீத அளவே உற்பத்தியானது
ADDED : ஜன 12, 2024 06:34 AM
உத்தமபாளையம் : உத்தமபாளையத்தில் உள்ள உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தில் 2023-20-24 ம் ஆண்டிற்கான இலக்கு 55 ஆயிரம் லிட்டரை எட்டுவதில் சிக்கல் எழுந்துள்ளது.
நெல், வாழை, நிலக்கடலை உள்ளிட்ட அனைத்துபயிர்களுக்கும் தேவையான உயிர் உரங்களான அசோஸ்ஸ்பரில்லம், ரைசோபியம், பாஸ்போபாக்டீரியா, பொட்டாஷ் போன்றவற்றை திரவ வடிவில் உற்பத்தி செய்யும் வேளாண் உயிர் உரங்கள் உற்பத்தி மையம் உத்தமபாளையத்தில் செயல்பட்டு வருகிறது.
திடப் பொருளாக ஆண்டிற்கு 246 மெ.டன் உற்பத்தி செய்து வந்தனர். நவீன தொழில்நுட்ப அடிப்படையில் திரவ உயிர் உங்கள் சில ஆண்டுகளாக இந்த மையத்தில் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஒவ்வொரு ஆண்டும் 55 ஆயிரம் லிட்டர் உயிர் உரங்கள் உற்பத்தி செய்து நாமக்கல், கரூர், சேலம், தேனி மாவட்டங்களுக்கு வினியோகிக்க வேளாண் துறை ஆணையர் உத்தரவிட்டுள்ளார்.
இங்கு உற்பத்தி செய்யப்படும் உயிர் உரங்கள் வேளாண் துறை டெப்போக்களுக்கு மட்டுமே வழங்கப்படுகிறது. தனியார் கடைகளில் கிடைக்காது.
விவசாயிகளுக்கு 50 சதவீத மானியத்தில் விற்பனை செய்கின்றனர். 500 மில்லி பொட்டாஷ் முழு விலை ரூ.300. ஆனால் 50 சதவீத மானியத்தில் ரூ.150 க்கு வழங்குகிறது. திரவ உரங்களை பயிர்கள் வேர்கள் மூலம் விரைவாக கிரகித்து கொள்கிறது. 2023 -20-24 ம் ஆண்டிற்குரிய 55 ஆயிரம் லிட்டர் என்ற இலக்கில் 50 சதவீதம் மட்டுமே இதுவரை உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டு வரும் மார்ச்சில் முடிந்து விடும். எனவே 55 ஆயிரம் லிட்டர் என்ற இலக்கை எட்ட முடியாத நிலை உள்ளது . இணை இயக்குநர் உயிர் உரங்கள் உற்பத்தி மையத்தை ஆய்வு செய்து உற்பத்தியை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.