குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முடியாது!
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முடியாது!
குழம்பிய குட்டையில் மீன் பிடிக்க முடியாது!
ADDED : ஜன 11, 2024 10:24 PM
பன்னீர்செல்வம் நம்பிக்கை துரோகி. கட்சி அலுவலகத்திற்குள் அடியாட்களோடு நுழைந்து, ஆவணங்களை எடுத்ததுடன், பொருட்களையும் கொள்ளை அடித்தார். அப்படிப்பட்டவர்களுக்கு நீதிமன்றம் தண்டனை கொடுத்துள்ளது.
குழப்பத்திற்கு மேல் குழப்பம் விளைவிக்க, பன்னீர்செல்வம் நீதிமன்ற நடவடிக்கை எடுத்து உள்ளார். குழம்பிய குட்டையில், அவரால் மீன்பிடிக்க இயலாது. அனைவரும் ஒற்றுமையாக செயல்படுகிறோம்.
கட்சி சட்ட திட்ட விதிகளின்படி செயல்படுகிறது. எங்கு சென்றாலும், நீதி எங்கள் பக்கம் என்பது நிலைநாட்டப்படும். தி.மு.க., அரசை பொறுத்தவரை வாய் சவடால் தான். மக்கள் குறித்து கவலைப்படாததாக தி.மு.க., அரசு உள்ளது. கமிஷன், கலெக் ஷன், கரப்ஷன் போன்றவற்றிலே குறியாக உள்ளது.
- ஜெயகுமார்,
அ.தி.மு.க., முன்னாள் அமைச்சர்.