/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/கோவில், குளக்கரைக்கு வழி கேட்டு ஊவேரி சத்திரம் பகுதியினர் மறியல்கோவில், குளக்கரைக்கு வழி கேட்டு ஊவேரி சத்திரம் பகுதியினர் மறியல்
கோவில், குளக்கரைக்கு வழி கேட்டு ஊவேரி சத்திரம் பகுதியினர் மறியல்
கோவில், குளக்கரைக்கு வழி கேட்டு ஊவேரி சத்திரம் பகுதியினர் மறியல்
கோவில், குளக்கரைக்கு வழி கேட்டு ஊவேரி சத்திரம் பகுதியினர் மறியல்
ADDED : ஜன 11, 2024 10:16 PM

காஞ்சிபுரம்:ஊவேரி சத்திரம் கிராம பேருந்து நிறுத்தத்திற்கு அருகே, பரசுராமேஸ்வரர், ஆஞ்சநேயர், துர்க்கை ஆகிய கோவில்கள் மற்றும் தர்மகுளம் உள்ளன.
இங்குள்ள கோவிலை, அனைத்து தரப்பினரும் வழிபடுகின்றனர். மேலும், தர்ம குளக்கரை அருகே, இறந்தவர்களின் ஈமச்சடங்கு செய்ய பயன்படுத்தி வருகின்றனர்.
பி.டி.லீ., செங்கல்வராய நாயகர் பொறியியல் கல்லுாரி நிர்வாகம், சுற்றுச்சுவர் கட்டும் பணியை நேற்று காலை துவக்கியது. இதை, ஊவேரி சத்திரம் கிராமத்தினர் தடுத்தனர். இருப்பினும், கட்டுமான பணிகளை கல்லுாரி நிர்வாகம் தொடர்ந்தது.
இதையறிந்த கிராம மக்கள், காஞ்சிபுரம் - அரக்கோணம் சாலையில், நேற்று மதியம் 12:00 மணிக்கு சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த காஞ்சிபுரம் போலீசார், டி.எஸ்.பி., ஜூலியர் சீசர், காஞ்சிபுரம் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் மற்றும்காஞ்சிபுரம் தாசில்தார்புவனேஸ்வரன் ஆகியோர் கிராம மக்களிடம் பேச்சியில் ஈடுபட்டனர். பின், கலைந்து சென்றனர்.
இதனால், காஞ்சிபுரம் - -அரக்கோணம் சாலையில், அரை மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.