Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/புதிய தேர் வடிவமைப்பு, புனரமைப்பு பணியில் கள்ளக்குறிச்சி ஹனேஷ் இன்ஜினியரிங்

புதிய தேர் வடிவமைப்பு, புனரமைப்பு பணியில் கள்ளக்குறிச்சி ஹனேஷ் இன்ஜினியரிங்

புதிய தேர் வடிவமைப்பு, புனரமைப்பு பணியில் கள்ளக்குறிச்சி ஹனேஷ் இன்ஜினியரிங்

புதிய தேர் வடிவமைப்பு, புனரமைப்பு பணியில் கள்ளக்குறிச்சி ஹனேஷ் இன்ஜினியரிங்

ADDED : ஜன 12, 2024 04:21 AM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சியில் புதிய தேர்கள் வடிவமைப்பு மற்றும் பழங்கால பழைய தேர்களை அதிநவீன தொழில்நுட்பத்தில் புனரமைக்கும் பணிகளை ஹனேஷ் இன்ஜினியரிங் தேர் பட்டறை மேற்கொண்டு வருகிறது.

கள்ளக்குறிச்சி - சேலம் தேசிய நெடுஞ்சாலையில் உலகங்காத்தான் பகுதியில் ஹனேஷ் இன்ஜினியரிங் தேர் பட்டறை எனும் தேர் வடிவமைப்பு கூடம் உள்ளது.

இங்கு கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக அதிநவீன தொழில் நுட்பத்துடன் கூடிய புதிய தேர் வடிவமைப்பு பணிகளும், பழங்கால தேர்களை வடிவம் மாறாமல் நவீன தொழில் நுட்பத்துடன் இயங்கும் வகையில் தேர் பணிகள் செய்யப்பட்டு வருகிறது.

இலுப்பை மரங்களால் சுவாமி சிலைகளுடன் அழகிய வடிவமைப்புகளுடன், பிரேக்குடன் கூடிய இரும்பு அச்சுகளைக் கொண்ட சக்கரங்களைப் பொருத்தப்படுகிறது.

அத்துடன் பல்வேறு அளவுகளில் 100 ஆண்டுகளுக்கு மேலாக உழைக்கக்கூடிய தொழில்நுட்பத்துடன் தேர் செய்யும் பணியை பிரகாஷ், 45; என்பவர் செய்து வருகிறார். இங்கு 4 லட்சம் ரூபாய் மதிப்பில் நான்கரை அடி அகலம், 21 அடி உயரம், பனிெரண்டரை அடி அகலம், 37 அடி உயரம் வரையிலான பிரம்மாண்ட தேர்கள் செய்யப்படுகிறது.

மேலும், பல ஆண்டுகள் பராமரிப்பின்றி பழுதடைந்த பழைய தேர்களையும், அதன் வடிவம் மாறாமல் மர அச்சுக்களை மாற்றி, இரும்பு அச்சுக்களை பொருத்தி புதிய தொழில் நுட்பத்தில் தயார் செய்கின்றனர். 5 அடி முதல் 15 அடி அகலம் வரையிலான இரும்பு சக்கரங்கள் தேர்களின் அளவுக்கு ஏற்றாற்போல் தயார் செய்யப்படுகிறது. புதிய தேர் வாங்கினாலும், பழைய தேர்களை புதிப்பித்தாலும் மூன்று ஆண்டுகள் வரை இலவசமாக பராமரிப்புகள் செய்யப்பட்டு வருகிறது.

இந்த தேர்களை எந்தவித பாதிப்பும் ஏற்படாதவாறு இரும்பு அச்சுகளில் லாரி டயர்களை பொருத்தி தேவைப்படுவோர்களின் பகுதிகளுக்கு நேரில் கொண்டு செல்கின்றனர். தேரோடும் வீதிகள் வழியாக தேர்களை சோதனை ஓட்டம் நடத்தியும் காண்பிக்கின்றனர்.

தேர்களை அந்தந்த பகுதிகளுக்கே சென்று தயாரித்துக் கொடுக்கும் கட்டமைப்புகளையும் மேற்கொண்டு வருகின்றனர். தொடர்பு எண்: 99761 62384 ஆகும்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us