/உள்ளூர் செய்திகள்/தேனி/பழனிசாமி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் பன்னீர்செல்வம் ஆவேசம்பழனிசாமி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் பன்னீர்செல்வம் ஆவேசம்
பழனிசாமி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் பன்னீர்செல்வம் ஆவேசம்
பழனிசாமி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் பன்னீர்செல்வம் ஆவேசம்
பழனிசாமி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் பன்னீர்செல்வம் ஆவேசம்
ADDED : ஜன 12, 2024 12:41 AM

தேனி:அ.தி.மு.க., பொதுச்செயலாளர் பதவியை பழனிசாமி ராஜினாமா செய்ய வேண்டும் என தேனியில் நடந்த அ.தி.மு.க., தொண்டர்கள் உரிமை மீட்பு குழு ஆலோசனை கூட்டத்தில் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ஆவேசமாக பேசினார்.
அவர் மேலும் பேசியதாவது: தற்போது பணம் படைத்தவர்கள் பொதுச்செயலாளர் ஆகும் நிலை உருவாகியுள்ளது. தனிக்கட்சி துவங்கும் எண்ணம் துளியும் இல்லை. கட்சியை தீயவர்களிடமிருந்து மீட்பதே இலக்கு. சசிகலா, தினகரன், நான் ஒருங்கிணைந்து தேர்தலை சந்திக்க தொண்டர்கள் விரும்புகின்றனர். ஆனால் பழனிசாமி சேர மறுக்கிறார். அவர் தொண்டர்களின் எதிரியாகி விட்டார். பழனிசாமி பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். ஜனநாயக முறைப்படி கட்சித்தேர்தல் நடத்தினால் உண்மை நிலைதெரியும்.
கொடநாடு கொள்ளை, கொலை வழக்கை 3 மாதங்களில் குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தருவதாக முதல்வர் ஸ்டாலின் கூறினார். ஆனால் 3 ஆண்டுகள் ஆக போகிறது. பொதுமக்கள் மீண்டும் அ.தி.மு.க., ஆட்சி அமைக்க விரும்புகின்றனர் என்றார்.
பின் அவர் கூறுகையில், ''மேல்முறையீடு மனு மீதான தீர்ப்பு இறுதி அல்ல. உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஜன.,19ல் விசாரணைக்கு வருகிறது. தீர்ப்பு வேட்டி, துண்டை மாற்றலாம். உடலில் ஓடுவது அ.தி.மு.க., ரத்தம். பத்து ஆண்டுகள் நல் ஆட்சி வழங்கிய பா.ஜ.,வை சேர்ந்த மோடி பிரதமராக வர தார்மீக ஆதரவு தருகிறோம். இந்நிமிடம் வரை பா.ஜ.,வுடன் தொடர்பில் உள்ளேன்.
தினகரனுடன் சென்று தொண்டர்களை சந்திக்கும் சூழல் ஏற்பட்டுள்ளது. பழனிசாமி பேச்சுவார்த்தைக்கு அழைக்க வாய்ப்பில்லை என்கிறார். குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு ஓட்டளிக்க எம்.பி.,க்களை பழனிசாமி தான் அனுப்பினார். அவர் வீட்டில் தான் கூட்டம் நடந்தது. நான் கூறினேன் என்பது பொய். நிலைமைக்கு தகுந்தவாறு அவர் பேசி வருகிறார்,'' என்றார்.