/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய வணிக வரி அதிகாரிகள்: சி.பி.ஐ., முதல் தகவல் அறிக்கையில் தகவல்ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய வணிக வரி அதிகாரிகள்: சி.பி.ஐ., முதல் தகவல் அறிக்கையில் தகவல்
ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய வணிக வரி அதிகாரிகள்: சி.பி.ஐ., முதல் தகவல் அறிக்கையில் தகவல்
ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய வணிக வரி அதிகாரிகள்: சி.பி.ஐ., முதல் தகவல் அறிக்கையில் தகவல்
ரூ.2 லட்சம் லஞ்சம் வாங்கிய வணிக வரி அதிகாரிகள்: சி.பி.ஐ., முதல் தகவல் அறிக்கையில் தகவல்
ADDED : ஜன 12, 2024 03:41 AM
புதுச்சேரி: புதுச்சேரியில் பிளாஸ்டிக் தயாரிக்கும் தொழிற்சாலையில், ரூ.30 லட்சத்திற்கான வரி ஏய்ப்பை மறைக்க, வணிக வரி அதிகாரிகள் லஞ்சம் வாங்கியதாக சி.பி.ஐ., தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரியை அடுத்த அரியூரில் சோலை செல்வராஜ் என்பவர், பிளாஸ்டிக் பேக் தயாரிக்கும் தொழிற்சாலை நடத்தி வருகிறார். அந்த நிறுவனத்தில் வணிக வரி உதவி அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
இந்த சோதனையில், செல்வராசு ரூ. 30 லட்சம் வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் கடந்த, 2023ம் ஆண்டுக்கான வரி மற்றும் அபராதம், பிற கட்டணங்களுடன் சேர்ந்து சுமார் ரூ. 12 லட்சத்து 35 ஆயிரம் செலுத்த வேண்டியிருந்தது.
இந்நிலையில், வரி ஆலோசகர் ராதிகா அவரிடம், அவர் செலுத்த வேண்டிய தொகையில், 30 சதவீதமாக, ரூ. 4 லட்சம் தந்தால் அபராதம் இல்லாமல் வரி செலுத்த அதிகாரிகளிடம் ஏற்பாடு செய்வதாக தெரிவித்தார். இறுதியில், ரூ. 2.80 லட்சம் லஞ்சமாக நிர்ணயிக்கப்பட்டது.
தவணை முறையில் வணிக வரி உதவி அதிகாரிகளுக்கு லஞ்சம் தர ராதிகாவின் வங்கி கணக்கில் ரூ. 2 லட்சத்தை செல்வராசு செலுத்தினார். இது தொடர்பாக எழுந்த புகாரில், வரி ஏய்ப்பை மறைக்க லஞ்சம் வாங்கிய வணிக வரி அதிகாரிகள், ஆனந்தன், முருகானந்தம், ஆலோசகர் ராதிகா மற்றும் நிறுவன உரிமையாளர் செல்வராசு ஆகியோரை, கடந்த வாரம், சி.பி.ஐ., கைது செய்தது.
அவர்கள் மீது, ஊழல் தடுப்புச்சட்டம் -1988 மற்றும் குற்றச்சதி ஆகிய பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த லஞ்ச விவகாரம், குறித்து சி.பி.ஐ., தாக்கல் செய்த முதல் தகவல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.