ADDED : ஜன 12, 2024 12:41 AM

தாமரை பிரதர்ஸ் மீடியா பி.லிட் வெளியீடுகள்
நுால்களைப்பெற அழைக்க: 1800 425 7700 / வாட்ஸ் ஆப் செய்ய 75500 09565
1. 108 திவ்யதேச தரிசனம் - ஆழ்வார் உரையுடன்
ஆசிரியர்: பிரபு சங்கர்
பக்கம்: 180, விலை: ரூ. 240
--
தமிழகத்தில் உள்ள 108 திவ்யதேசங்களைப் பற்றி கூறுகிறது. முக்கியமாக, தாமிரபரணி நதிக்கரையில் உள்ள நவதிருப்பதிகளைப் பற்றியும், அங்கு பாடிய ஆழ்வார்கள் பற்றியும், பாசுரங்கள் பற்றியும் விளக்கி சிலாகிக்கிறது. நம்மாழ்வாரின் பாசுரங்களின் விளக்கம் அருமை.
***
2. தெய்வீகத் திருமணங்கள்
ஆசிரியர் : வா.ஜானகிராமன்
பக்கம்: 200, விலை: ரூ. 260
-
சிவன் - பார்வதி, சீனிவாசன், ருக்மணி, ராமன் - சீதை திருமணங்கள் சொல்லும் உள்ளுறை செய்திகளை அழகிய விளக்கங்களுடன் தொகுத்துள்ளார். வாழ்க்கை முழுக்க பயணிக்கும் உன்னத உறவான கணவன் - மனைவி உறவின் பெருமைகளை சொல்லி, வலுப்படுத்தும் நுால்.
---
3. இரத்தத்துளி
ஆசிரியர்: எல்.கைலாசம்
பக்கம்: 478, விலை: ரூ. 180
வெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
-
அதித்த கரிகாலனின் கொலைதான் சோழர் சரித்திரத்தில் நெஞ்சை உலுக்கும் நிகழ்வாக இன்று வரை உள்ளது. திருவாலங்காடு செப்பேடும், உடையார்குடி கல்வெட்டும் இதுகுறித்த செய்திகளை சொன்னாலும், இந்த நாவல், புலனாய்வு முறையில் விறுவிறுப்பாக பின்னப்பட்டுள்ளது.
*****
4. இந்தியாவின் நீர் மனிதன் ராஜேந்தர்சிங்
ஆசிரியர்: ஜெகாதா
பக்கம்: 220, விலை: ரூ. 270
வெளியீடு: சத்யா
-
இந்தியாவின் வறண்ட மாநிலமான ராஜஸ்தானில், 850 கிராமங்களில், 4,500 தடுப்பணைகளைக் கட்டி, மழைநீர் சேமிப்பு திட்டத்தின் வாயிலாக ஆறு, குளங்களை மீட்டவர் ராஜேந்திரசிங். ஏளனம் செய்த மக்களையே, தன் சக்தியாக்கி சாதித்த இவரது வியூகங்களை சொல்லும் நுால்.
*****
5. தமிழ் இலக்கிய வரலாறு
ஆசிரியர்: தெ.பொ.மீனாட்சி சுந்தரனார்
பக்கம்: 384
விலை: ரூ. 380
வெளியீடு: ஸ்ரீ செண்பகா பதிப்பகம்
--
புதுமைக்காலம் துவங்கி, சிற்றிலங்கியங்கள், சோழர்கால காப்பியங்கள், சமண காப்பியங்கள், ஆழ்வார், நாயண்மார்கள் காலம், இரட்டைக்காப்பியங்கள், சங்கப்பாடல்கள் வரை தமிழ் இலக்கிய வரலாற்றை ஆய்வாக செய்து, சிகாகோவில் ஆற்றிய சொற்பொழிவின் தொகுப்பு நுால்.
--------
நிப்பானம்
ஆசிரியர்: சுவேதா
பக்கம்: 136, விலை: ரூ. 130
வெளியீடு: திருநங்கை பிரஸ்
-
திருநங்கையரின் வாழ்வு பற்றிய புரிதல் மற்றும் தெளிவு, போராட்ட குணம், கண்ணியமாக வாழ வேண்டிய விருப்பம், நேர்மை உள்ளிட்டவற்றை, திருநங்கை சமூகத்துக்கு விதைக்கும் நுால். திருநங்கையரை வெறுத்து ஒதுக்கும் சமூகத்திற்கான அறிவியல் புரிதலையும் தருகிறது.
***
காலிடுக்கில் ஒப்பந்தங்கள்
ஆசிரியர்: ஆல்கா
பக்கம்: 56, விலை: ரூ. 100
வெளியீடு: திருநங்கை எல்.எல்.பி
-
மாறிய பாலினத்தவரின் உணர்வுகளை சொல்லும் கவிதைகள் நிரம்பி உள்ளன. தவறான காதல், கண்மூடித்தனமான காதலையும் கவிதைகள் கண்டிக்கத் தவறவில்லை. இவர் மருத்துவ ஆலோசகராக உள்ளதால், குடும்ப வன்முறைக்கு எதிராகவும் குரல் எழுப்பி உள்ளார்.