கேரளாவை முன்பே எச்சரித்தோம்: மாநில அரசின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம்- அமித்ஷா
கேரளாவை முன்பே எச்சரித்தோம்: மாநில அரசின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம்- அமித்ஷா
கேரளாவை முன்பே எச்சரித்தோம்: மாநில அரசின் அலட்சியமே உயிரிழப்புக்கு காரணம்- அமித்ஷா
UPDATED : ஜூலை 31, 2024 03:43 PM
ADDED : ஜூலை 31, 2024 02:25 PM

புதுடில்லி: நிலச்சரிவு ஏற்படும் , மக்கள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என கேரளாவை முன்கூட்டியே எச்சரித்தோம் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
ராஜ்யசபாவில் அவர் கூறியதாவது: வயநாட்டில் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். நிலச்சரிவு குறித்து முன்கூட்டியே கேரளாவுக்கு எச்சரிக்கை விடுத்தோம். 7 நாளுக்கு முன்பே , ஜூலை 23ல் மத்திய அரசு தகவல் அளித்தது. 24,25 ல் மீண்டும் எச்சரிக்கை விடுத்தோம். 27 ல் 20 செ.மீ.,க்கு மேல் மழை பெய்யும் , நிலச்சரிவு ஏற்படும், மக்கள் உயிரிழக்க வாய்ப்பு உள்ளது என எச்சரிக்கை அளிக்கப்பட்டது.
முன்கூட்டியே எச்சரிக்கை அமைப்பு குறித்து கேள்வி எழுப்புகின்றனர். 2014க்கு பிறகு இந்த அமைப்புக்காக மத்திய அரசு ரூ.2 ஆயிரம் கோடி செலவு செய்துள்ளது.
ஆபத்தான பகுதிகளில் மக்களை வெளியேற்றாமல் பினராயி விஜயன் அரசு அலட்சியமாக இருந்ததே உயிரிழப்புக்கு காரணம். நிலச்சரிவு ஏற்படும் என தெரிந்ததும் தேசிய பேரிடர் மீட்பு படையின் 9 குழுக்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டன. இவ்வாறு அமித்ஷா கூறினார்.