பெங்களூரு - அயோத்தி விமானம் 21ம் தேதி ரூ.33,999 கட்டணம்
பெங்களூரு - அயோத்தி விமானம் 21ம் தேதி ரூ.33,999 கட்டணம்
பெங்களூரு - அயோத்தி விமானம் 21ம் தேதி ரூ.33,999 கட்டணம்
ADDED : ஜன 11, 2024 11:33 PM
பெங்களூரு: ராமர் கோவில் திறப்பு விழாவை ஒட்டி, பெங்களூரு - அயோத்தி விமான கட்டணம், 21ம் தேதி 33,999 ரூபாயாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம், அயோத்தியில், ராமர் கோவில் கட்டப்பட்டு உள்ளது. வரும் 22ம் தேதி கோவில் திறப்பு விழா நடக்கிறது.
கோவில் திறப்பை ஒட்டி நாடு முழுதும் உள்ள ராம பக்தர்கள், ஹிந்துக்கள், அயோத்தி செல்வதற்கு ஆர்வம் காட்டுகின்றனர். விமான பயணியர் வசதிக்காக, அயோத்தியில் சமீபத்தில் விமான நிலையம் திறக்கப்பட்டது.
இந்நிலையில், ராமர் கோவில் திறப்பை ஒட்டி, விமானங்களில் கட்டணம் தாறுமாறாக எகிறி உள்ளது. பெங்களூரில் இருந்து அயோத்தி செல்ல, சாதாரண நாட்களில் விமான கட்டணம் 6,100ஆக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.
ஆனால், வரும் 20, 21ம் தேதிகளில், ராக்கெட் வேகத்தில் கட்டணம் எகிறி உள்ளது.
வரும் 20ம் தேதி 21,100 ரூபாயும், 21ம் தேதி 33,999 ரூபாயும் கட்டணமாக நிர்ணயிக்கப்பட்டு உள்ளது. பெங்களூரு - அயோத்தி இடையில் தற்போது விமான சேவை இல்லை.
ஆனால், வரும் 17ம் தேதி முதல் வாரத்தில் திங்கள், புதன், வியாழக் கிழமைகளில், ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான நிறுவனம், பெங்களூரு - அயோத்தி இடையில் விமானம் இயக்குகிறது.
விமான பயண நேரம் ஆறு மணி நேரம். இடையில் டில்லி, குவாலியர், மும்பை, ஆமதாபாத் ஆகிய, நான்கு விமான நிலையங்களில் ஏதாவது ஒரு விமான நிறுத்தத்தில், விமானம் தரையிறங்கி அங்கிருந்து புறப்பட்டு செல்லும்.