/உள்ளூர் செய்திகள்/செங்கல்பட்டு/வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை திருட்டுவீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை திருட்டு
வீட்டின் பூட்டை உடைத்து 30 சவரன் நகை திருட்டு
ADDED : ஜன 12, 2024 12:04 AM
மறைமலை நகர்:மறைமலை நகர் அடுத்த ரயில் நகர் பகுதியை சேர்ந்தவர் யுவராஜ், 38. தனியார் நிறுவன ஊழியர். இவருக்கு, திருமணமாகி திவ்யா என்ற மனைவி உள்ளார்.
நேற்று முன்தினம் மாலை, யுவராஜ் வேலைக்கு சென்ற நிலையில், திவ்யா வீட்டை பூட்டி விட்டு, மறைமலை நகர் பகுதியில் உள்ள மருத்துவமனைக்கு, தன் மாமியாரை அழைத்து சென்றார்.
திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு, பீரோவில் இருந்த செயின், ஆரம், நெக்லஸ் உள்ளிட்ட, 30 சவரன் தங்க நகைகள் கொள்ளை அடிக்கப்பட்டது தெரியவந்தது.
தகவலறிந்து, சம்பவ இடத்திற்கு வந்த மறைமலை நகர் போலீசார் மற்றும் கைரேகை நிபுணர்கள், தடயங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
அதேபோல், ரயில் நகர் அடுத்த நின்னைகாட்டூர் பகுதியை சேர்ந்த பரமேஸ்வரி, 60, என்பவரின் வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், வீட்டில் இருந்த 4.5 சவரன் தங்க நகைகளை திருடி சென்றனர்.
சம்பவ இடங்களை நேரில் பார்வையிட்ட கூடுவாஞ்சேரி உதவி கமிஷனர் ஜெயராஜ், கொள்ளையர்களை விரைந்து பிடிக்க, மறைமலை நகர் போலீசாருக்கு உத்தரவிட்டார்.