/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/வெளியூர் செல்ல சிறப்பு பஸ்; கோவையில் இன்று முதல் இயக்கம்வெளியூர் செல்ல சிறப்பு பஸ்; கோவையில் இன்று முதல் இயக்கம்
வெளியூர் செல்ல சிறப்பு பஸ்; கோவையில் இன்று முதல் இயக்கம்
வெளியூர் செல்ல சிறப்பு பஸ்; கோவையில் இன்று முதல் இயக்கம்
வெளியூர் செல்ல சிறப்பு பஸ்; கோவையில் இன்று முதல் இயக்கம்
ADDED : ஜன 12, 2024 12:21 AM
கோவை:பொங்கல் பண்டிகையை ஒட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழகம் கோவையிலிருந்து வெளியூர் செல்ல சிறப்பு பஸ்களை இயக்குகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்துக்கழக கோவை மண்டல மேலாண் இயக்குனர் ஜோசப்டயஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
பொங்கல் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுவதற்காக கோவையிலிருந்து திருச்சி, மதுரைக்கு 200 பஸ், தேனிக்கு 100 பஸ், சேலத்துக்கு 250 பஸ்களும் சிறப்பு பஸ்களாக இன்று முதல் 14ம் தேதி வரை இயக்கப்படுகிறது.
மதுரை, தேனி மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் சிங்காநல்லுார் பஸ் ஸ்டாண்டிலிருந்தும், கரூர், திருச்சி செல்லும் பஸ்கள் சூலுார் பஸ் ஸ்டாண்டிலிருந்தும், சேலம், திருப்பூர், ஈரோடு, ஆனைகட்டி, மேட்டுப்பாளையம், சத்தியமங்கலம் மார்க்கமாக செல்லும் பஸ்கள் காந்திபுரம் மத்திய பஸ் ஸ்டாண்டிலிருந்தும், ஊட்டி,கூடலுார் செல்லும் பஸ்கள் மேட்டுப்பாளையம்சாலை சி.டி.சி.டெப்போ எதிரிலுள்ள புதிய பஸ்ஸ்டாண்டிலிருந்தும் புறப்படும்.மேற்குறிப்பிட்ட அனைத்து பஸ் ஸ்டாண்டுகளுக்கும் காந்திபுரம் மற்றும் உக்கடம் பஸ்ஸ்டாண்டிலிருந்து இணைப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.