/உள்ளூர் செய்திகள்/சென்னை/செங்குன்றம் பள்ளி அருகே குவியும் பழுது வாகனங்கள்செங்குன்றம் பள்ளி அருகே குவியும் பழுது வாகனங்கள்
செங்குன்றம் பள்ளி அருகே குவியும் பழுது வாகனங்கள்
செங்குன்றம் பள்ளி அருகே குவியும் பழுது வாகனங்கள்
செங்குன்றம் பள்ளி அருகே குவியும் பழுது வாகனங்கள்
ADDED : ஜன 12, 2024 12:49 AM
செங்குன்றம்,அரசு பள்ளியின் நுழைவு வாசல் அருகே, பழுதான இரு சக்கர வாகனம், தள்ளு வண்டி, குப்பை கழிவுகள் குவித்து வைத்துள்ளதால், மாணவர்கள் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
சென்னை செங்குன்றம், ஸ்ரீ பனையாத்தம்மன் கோவில் அருகே, 'பாரத் அரசு ஆரம்ப பள்ளி' உள்ளது. சுற்றுவட்டாரங்களில், 200க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படிக்கின்றனர்.
அந்த பள்ளியின் நுழைவாயில் அருகே சேதமடைந்த தள்ளுவண்டி, பழுதான இரு சக்கர வாகனங்கள், குப்பை கழிவுகள் குவித்து வைக்கப்பட்டுள்ளன. அவற்றின் இடைவெளிகளில் மழைநீர் தேங்கி, 'டெங்கு' கொசு உற்பத்தியாகின்றன. அரசு பள்ளி என்பதால், பள்ளி ஆசிரியர் மற்றும் நிர்வாகத்தினர், அவற்றை அகற்ற முடியாமல் தவிக்கின்றனர்.
அரசு பள்ளி மற்றும் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு செல்லும் வழியில் குவிந்துள்ள சுகாதார சீர்கேட்டை அகற்ற வேண்டும் என, நாரவாரிக்குப்பம் பேரூராட்சி நிர்வாகத்திடம் சமூக ஆர்வலர்கள் புகார் செய்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.
பள்ளி மாணவர்கள் பாதிக்கப்படும் முன், பேரூராட்சி நிர்வாகம் விழித்துக்கொள்ள வேண்டும் என, கோரிக்கை எழுந்துள்ளது.