/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/திருப்பூரில் சங்க இலக்கிய பூங்கா அமைச்சர் மரக்கன்று நட்டு துவக்கம்திருப்பூரில் சங்க இலக்கிய பூங்கா அமைச்சர் மரக்கன்று நட்டு துவக்கம்
திருப்பூரில் சங்க இலக்கிய பூங்கா அமைச்சர் மரக்கன்று நட்டு துவக்கம்
திருப்பூரில் சங்க இலக்கிய பூங்கா அமைச்சர் மரக்கன்று நட்டு துவக்கம்
திருப்பூரில் சங்க இலக்கிய பூங்கா அமைச்சர் மரக்கன்று நட்டு துவக்கம்
ADDED : ஜன 11, 2024 08:02 PM

திருப்பூர்:'வனத்துக்குள் திருப்பூர்' திட்டத்தின்படி, திருப்பூர் மாவட்டத்தில், 2015ம் ஆண்டு முதல் 18 லட்சம் மரக்கன்றுகள் நடப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் ஒரு மைல் கல்லாக, திருப்பூர் மாநகராட்சி இடத்தில், சங்க இலக்கிய பூங்கா அமைக்கப்படுகிறது.
அகநானுாறு, புறநானுாறு, சிலப்பதிகாரம் உட்பட, 50 சங்க இலக்கிய நுால்களில், தாவரங்கள் குறித்த தகவல் இடம் பெற்றுள்ளது. இலக்கிய நுால்களில் குறிப்பிட்டுள்ள மரங்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், திருப்பூரில் சங்க இலக்கிய பூங்கா முதன்முறையாக உருவாக்கப்படுகிறது.
இந்த சங்க இலக்கிய பூங்கா அமைக்க மரக்கன்று நடும் பணி நேற்று முன்தினம் துவங்கியது. திருப்பூர், சந்திராபுரத்தில், கலெக்டர் கிறிஸ்துராஜ் தலைமையில் நடந்த விழாவில், அமைச்சர் சாமிநாதன், மேயர் தினேஷ்குமார், கமிஷனர் பவன்குமார், கவுன்சிலர் தங்கராஜ் உட்பட் பலர் பங்கேற்று மரக்கன்று நட்டனர்.
'வனத்துக்குள் திருப்பூர்' இயக்குனர் சிவராம் கூறுகையில், ''சங்க இலக்கிய நுால்களில், 210 வகையான, மரம், செடி, கொடிகள் குறிப்பிடப்பட்டுள்ளன. அவற்றில் இருந்து, 150 வகையான மரங்கள் கண்டறியப்பட்டுள்ளன.
''அவ்வகை மரக்கன்றுகளை நட்டு, சங்க இலக்கிய பூங்கா உருவாக்கப்படுகிறது. ஒவ்வொரு மரத்தின் அருகிலும், சங்க இலக்கிய பாடல், மரத்தின் குணநலன் குறித்த சிறிய கல்வெட்டும் வைக்கப்படும். பூங்கா, இரண்டு ஆண்டுகள் பராமரித்து உருவாக்கப்படும்,'' என்றார்.