/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/தொழில் முனைவோருக்கு நிதியுதவி விண்ணப்பிக்க அழைப்புதொழில் முனைவோருக்கு நிதியுதவி விண்ணப்பிக்க அழைப்பு
தொழில் முனைவோருக்கு நிதியுதவி விண்ணப்பிக்க அழைப்பு
தொழில் முனைவோருக்கு நிதியுதவி விண்ணப்பிக்க அழைப்பு
தொழில் முனைவோருக்கு நிதியுதவி விண்ணப்பிக்க அழைப்பு
ADDED : ஜன 11, 2024 09:50 PM
காஞ்சிபுரம்:தமிழக அரசு, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு, தொழில் முதலீட்டு கழகத்தின் சார்பில், மறுசீரமைப்பிற்கான நிதியுதவி வழங்கப்பட உள்ளது.
இதில், 1 - 3 லட்சம் ரூபாய் வரை, ஆறு சதவீத வட்டிக்கு வழங்கப்பட உள்ளது. இந்த கடன் பெறுவதற்கு, கடந்தாண்டு செப்டம்பர் மாதம் நிறுவனம் செயல்பாட்டில் இருக்க வேண்டும். கடந்தாண்டு, ஏப்., முதல் செப்., மாதம் வரையில், வருமானத்தில் சரக்கு மற்றும் சேவை வரி ரிட்டன் பெற்றிருக்க வேண்டும்.
சி.ஏ., சான்றிதழ் படி, 20 சதவீதம் வரை கடன் பெற்றிருக்க வேண்டும். முதல் மூன்று மாதங்களுக்கு, வட்டி மட்டும் செலுத்த வேண்டும். நான்காவது மாதம் முதல், 21வது மாதம் வரை, வட்டியுடன், அசல் தவணையும் சேர்த்து செலுத்த வேண்டும்.
வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட உற்பத்தி மற்றும் சேவை துறை நிறுவனங்கள் மட்டும் நிதியுதவி பெறலாம். வரும் 31ம் தேதி வரையில் மாவட்ட தொழில் மையத்துடன் இணைந்து, விழிப்புணர்வு முகாம் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.
அதன்படி, இன்று திருமுடிவாக்கம் சிட்கோ தொழிற்பேட்டை பகுதியில் நடைபெறும் முகாமில், பாதிக்கப்பட்ட தொழில் முனைவோர் பங்கேற்கலாம் என, காஞ்சிபுரம் கலெக்டர்கலைச்செல்வி தெரிவித்துள்ளார்.