/உள்ளூர் செய்திகள்/பெரம்பலூர்/சான்றிதழ் கேட்டு வி.ஏ.ஓ.வை தாக்கிய இரண்டு பேர் கைதுசான்றிதழ் கேட்டு வி.ஏ.ஓ.வை தாக்கிய இரண்டு பேர் கைது
சான்றிதழ் கேட்டு வி.ஏ.ஓ.வை தாக்கிய இரண்டு பேர் கைது
சான்றிதழ் கேட்டு வி.ஏ.ஓ.வை தாக்கிய இரண்டு பேர் கைது
சான்றிதழ் கேட்டு வி.ஏ.ஓ.வை தாக்கிய இரண்டு பேர் கைது
ADDED : ஜன 12, 2024 12:32 AM
ஜெயங்கொண்டம்:-அரியலுார் மாவட்டம், இலையூர் கிராமத்தை சேர்ந்தவர் அன்பழகன், 45. இவருக்கு, இரண்டு சகோதரர்கள், சகோதரி உள்ளனர்.
இவரது தந்தை பெயரில் அடமானத்தில் உள்ள நகையை மீட்பதற்கு, வாரிசு சான்றிதழ் தேவைப்பட்டதால், 'ஆன்லைன்' வாயிலாக விண்ணப்பித்தார்.
வி.ஏ.ஓ., குருநாதன், 40, என்பவரை சந்தித்து, தான் மட்டுமே வாரிசு என, சான்றிதழுக்கு பரிந்துரை செய்யுமாறு கேட்டார். அப்போது, குருநாதன், 'நீங்கள் மட்டும் தான் வாரிசு என்று சான்றிதழ் வழங்க முடியாது' என, தெரிவித்தார்.
ஆத்திரமடைந்த அன்பழகன் மற்றும் அவருடன் வந்த சங்கர், வி.ஏ.ஓ.,வை சரமாரியாக அடித்து உதைத்தனர். படுகாயமடைந்த அவரை, அக்கம்பக்கத்தினர் மீட்டு, ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.
குருநாதன் புகாரில், ஜெயங்கொண்டம் இன்ஸ்பெக்டர் ராமராஜ் வழக்கு பதிந்து, சங்கர், அன்பழகன் இருவரையும் கைது செய்து விசாரிக்கிறார்.