/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/183 நீர்தேக்க தொட்டி கட்டுமான பணி சட்டசபை உறுதிமொழிக்குழு ஆய்வு183 நீர்தேக்க தொட்டி கட்டுமான பணி சட்டசபை உறுதிமொழிக்குழு ஆய்வு
183 நீர்தேக்க தொட்டி கட்டுமான பணி சட்டசபை உறுதிமொழிக்குழு ஆய்வு
183 நீர்தேக்க தொட்டி கட்டுமான பணி சட்டசபை உறுதிமொழிக்குழு ஆய்வு
183 நீர்தேக்க தொட்டி கட்டுமான பணி சட்டசபை உறுதிமொழிக்குழு ஆய்வு
ADDED : ஜன 12, 2024 01:47 PM
நாமக்கல்: நாமக்கல்லில் கட்டப்பட்டு வரும், 183 நீர்தேக்க தொட்டிகளை, சட்டசபை உறுதிமொழிக்குழுவினர், நேற்று ஆய்வு செய்தனர்.
நாமக்கல் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டு வரும் வளர்ச்சி திட்டங்களின் பணி முன்னேற்றம் குறித்து, தமிழக சட்டசபை உறுதிமொழிக் குழுவினர், நேற்று பல்வேறு பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டனர். அதில், குழுத்தலைவர், எம்.எல்.ஏ., வேல்முருகன் மற்றும் எம்.எல்.ஏ.,க்கள் அருள், பழனியாண்டி, மோகன், ராமலிங்கம், வில்வநாதன், ஜெயக்குமார், ஈஸ்வரன் மற்றும் கலெக்டர் உமா உள்ளிட்டோர் ஆய்வுக்கு சென்றனர்.
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, 345 கோடி ரூபாய் மதிப்பில், 37.68 ஏக்கர் பரப்பளவில், 700 படுக்கை வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்டுள்ளதை பார்வையிட்டனர். தொடர்ந்து, சிகிச்சை பெற்று வரும் உள்நோயாளிகளிடம் வழங்கப்படும் சிகிச்சை முறைகள் கேட்டறிந்தனர். பின், அரசு சட்டக்கல்லுாரியில் கட்டப்படும் நுாலக கட்டடம், கலையரங்கம், தங்கும் விடுதி, முதல்வர் குடியிருப்பு, விடுதி காப்பாளர்கள் குடியிருப்பு, திருச்செங்கோடு நகராட்சி பஸ் ஸ்டாண்ட், போலீஸ் ஸ்டேஷன், ராசிபுரம், சந்திரசேகரபுரம் உள்ளிட்ட பகுதிகளில் கூட்டுக்குடிநீர் திட்டத்திற்காக கட்டப்படும், 97 புதிய தரைமட்ட நீர்தேக்க தொட்டி, 86 புதிய மேல்நிலை நீர்தேக்க தொட்டி.
புதுச்சத்திரம் ஆரம்ப சுகாதார நிலையத்தில், 2.28 லட்சம் ரூபாய் மதிப்பில் செவிலியர்களுக்கு கட்டப்பட்டு வரும் குடியிருப்புகள், புதுச்சத்திரம் ஊராட்சி ஒன்றியம், நவணி கிராமத்தில், 2.50 கோடி ரூபாய் மதிப்பில், முன்னாள் முதல்வர் சுப்பராயன் மார்பளவு சிலையுடன் கூடிய அரங்கம் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு, கேட்டறிந்தனர். எஸ்.பி., ராஜேஸ் கண்ணன், நகராட்சி சேர்மன் கலாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
50 சதவீதம் நிறைவேற்றம்
தமிழக சட்டசபை உறுதிமொழிக்குழு தலைவர், எம்.எல்.ஏ., வேல்முருகன் கூறியதாவது: நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு திட்டப்பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. இதில், 53 உறுதி மொழிகளில், 29 நிறைவேற்றப்பட்டு, உறுதிமொழி பட்டியலில் இருந்து நீக்கம் செய்யப்படுகிறது. ஒரு உறுதிமொழி படித்து பதிவு செய்யப்படுகிறது. மீதமுள்ள, 23 உறுதி மொழிகள் நிலுவையில் உள்ளன. 2002லிருந்து ஒதுக்கப்பட்ட, 45 உறுதிமொழிகளில், 11 நிறைவேற்றப்பட்டுள்ளது. அதில், 34 உறுதிமொழிகள் நிலுவையில் வைக்கப்படுகின்றன. அதன்படி, 50 சதவீத உறுதிமொழிகள் நாமக்கல் மாவட்டத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் கூறினார்.