/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/சேதமடைந்த படுகை அணையில் விவசாயிகள் திடீர் ஆர்ப்பாட்டம்சேதமடைந்த படுகை அணையில் விவசாயிகள் திடீர் ஆர்ப்பாட்டம்
சேதமடைந்த படுகை அணையில் விவசாயிகள் திடீர் ஆர்ப்பாட்டம்
சேதமடைந்த படுகை அணையில் விவசாயிகள் திடீர் ஆர்ப்பாட்டம்
சேதமடைந்த படுகை அணையில் விவசாயிகள் திடீர் ஆர்ப்பாட்டம்
ADDED : ஜன 12, 2024 12:00 AM

திருக்கனுார்: செல்லிப்பட்டு சங்கராபரணி ஆற்றில் சேதமடைந்த படுகை அணையில் விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த ஆண்டு 2021ம் ஆண்டு பெய்த கனமழை மற்றும் வீடூர் அணை திறப்பு காரணமாக, அணை சேதமடைந்தது. இதனால், அணையில் தண்ணீர் தேக்கி வைக்க முடியாத நிலை ஏற்பட்டது.
படுகையணையை நம்பி இருந்த 25 கிராமங்களில் நிலத்தடி நீர் மட்டம் குறைய துவங்கியதால், விவசாயிகள் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
சமீபத்தில் பெய்த தொடர் கனமழை காரணமாக சங்கராபரணி ஆற்றில் உள்ள மூன்று தடுப்பணைகளும் நிரம்பி வழிந்தது. ஆனால், செல்லிப்பட்டு படுகையணை சீரமைக்கபடாததால், கனமழை பெய்தும் தண்ணீர் தேங்க வழியின்றி வீணாக வெளியேறியது.
இந்நிலையில், செல்லிப்பட்டில், புதிய படுகையணை அமைக்கும் பணியினை விரைவில் துவங்க வலியுறுத்தி புதுச்சேரி விவசாய சங்கத்தினர் அப்பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பினர்.