/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/நெல்லை டவுன் அருகே4 கடைகளில் தீ விபத்துநெல்லை டவுன் அருகே4 கடைகளில் தீ விபத்து
நெல்லை டவுன் அருகே4 கடைகளில் தீ விபத்து
நெல்லை டவுன் அருகே4 கடைகளில் தீ விபத்து
நெல்லை டவுன் அருகே4 கடைகளில் தீ விபத்து
ADDED : ஜூலை 13, 2011 01:33 AM
திருநெல்வேலி:நெல்லை டவுன் அருகே அடுத்தடுத்து 4 கடைகளில் 'திடீர்' தீ
விபத்து ஏற்பட்டது.நெல்லை டவுன் அருகேயுள்ள பாட்டப்பத்து பள்ளிவாசல்
தெருவில் இஸ்மாயில் என்பவருக்கு சொந்தமான புரோட்டா கடை உள்ளது.
நேற்று
முன்தினம் நள்ளிரவு இக்கடையில் திடீரென தீப்பிடித்தது. காற்று பலமாக
வீசியதால் அருகில் இருந்த தையல்கடை, மரக்கடை, லாண்டரி கடை ஆகியவற்றில் தீ
வேகமாக பரவியது. இதுகுறித்து பேட்டை தீயணைப்பு துறைக்கு தகவல்
கொடுக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு சென்ற தீயணைப்பு வீரர்கள் மேலும் தீ
வேகமாக பரவாமல் தடுத்து தீயை அணைத்தனர்.மின்கசிவு காரணமாக தீ விபத்து
ஏற்பட்டதா அல்லது வேறு காரணங்களா என்பது குறித்து டவுன் போலீசார் விசாரணை
நடத்திவருகின்றனர்.