மாநில சதுரங்கத்தில் வென்ற மாணவர்கள்
மாநில சதுரங்கத்தில் வென்ற மாணவர்கள்
மாநில சதுரங்கத்தில் வென்ற மாணவர்கள்
ADDED : ஜன 12, 2024 06:49 AM

பெருங்குடி : மதுரை சரஸ்வதி நாராயணன் கல்லுாரி உடற் கல்வித்துறை சார்பில் தியாகராஜன் செட்டியார் நினைவு மாநில சதுரங்க போட்டிகள் கல்லுாரியில் நடந்தது.
15 வயதிற்கு உட்பட்ட மாணவர்களுக்கு நடந்த இப்போட்டிகளில் 200க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். முதல் பத்து இடங்களை பிடித்த மாணவர்கள் முறையே வருமாறு
அண்ணாமலையார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி கதிர்காமன், இந்தியன் இன்டர்நேஷனல் பள்ளி ஆதிஸ் பாலமுருகன்,
விகாசா மேல்நிலைப்பள்ளி பிரசன்னா, ஜெயின் வித்யாலயா பள்ளி ஜியா பிரஜித், ஹோலி பேமிலி பெண்கள் மேல்நிலைப்பள்ளி பூர்விகா, வல்லபா வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி பவ்யா, கிரிட்டின், விகாசா மேல்நிலைப்பள்ளி இஷானா, ஸ்ரீ அரவிந்த் மீரோ பள்ளி யாழினிஸ்ரீ, எஸ்.பி.ஒ.ஏ., சி.பி.எஸ்.சி., பள்ளி கணேஷ் ஆதித்தன் ஆகியோர் முதல் 10 இடங்களில் வென்றனர்.
இந்தியன் இன்டர்நேஷனல் பள்ளி ரித்திகா பாலமுருகன், திருப்பரங்குன்றம் கேந்திர வித்யாலயா பள்ளி ஹர்சனாஸ்ரீ, நாய்ஸ் சி.பி.எஸ்.இ. பள்ளி ஜகித்ரா, எஸ்.பி.ஓ.ஏ., சி.பி.எஸ்.இ பள்ளி மோனிகா, வல்லபா வித்யாலயா சி.பி.எஸ்.இ., பள்ளி ரக் ஷனா, ஹோலி பேமிலி பிரைமரி பள்ளி சம்ருதா பரிசு வென்றனர்.
40 மாணவர்களை போட்டியில் பங்கேற்கச் செய்த வல்லபா வித்யாலயா சி.பி.எஸ்.இ. பள்ளிக்கு கேடயம் வழங்கப்பட்டது. பங்கேற்ற அனைவருக்கும் சான்றிதழ் வழங்கப்பட்டது. கல்லுாரி முதல்வர் ராஜேந்திரன் தலைமை வகித்து பரிசுகள் வழங்கினார். வணிகவியல் துறை தலைவர் ஜெயக்கொடி வரவேற்றார். உடல் கல்வி இயக்குனர் யுவராஜ் நன்றி கூறினார்.