தொண்டி: தொண்டி அருகே தீர்த்தாண்டதானத்தில் சகலதீர்த்தமுடையவர் கோயிலில் அமாவாசை நாட்களில் பக்தர்கள் இங்குள்ள கடலில் நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம்.
நேற்று மார்கழி அமாவாசையை முன்னிட்டு ஏராளமான பக்தர்கள் புனித நீராடி சகலதீர்த்தமுடையவர், சவுந்தரநாயகி அம்மனை தரிசனம் செய்தனர். அன்னதானம் நடந்தது.