Dinamalar-Logo
Dinamalar Logo


/செய்திகள்/கல்விமலர்/செய்திகள்/பொருளாதாரத்தில் இந்தியா வளர இளைஞர் சக்தியே காரணம்: பிரதமர் மோடி புகழாரம்

பொருளாதாரத்தில் இந்தியா வளர இளைஞர் சக்தியே காரணம்: பிரதமர் மோடி புகழாரம்

பொருளாதாரத்தில் இந்தியா வளர இளைஞர் சக்தியே காரணம்: பிரதமர் மோடி புகழாரம்

பொருளாதாரத்தில் இந்தியா வளர இளைஞர் சக்தியே காரணம்: பிரதமர் மோடி புகழாரம்

UPDATED : ஜன 12, 2024 12:00 AMADDED : ஜன 12, 2024 05:17 PM


Google News
நாசிக்:
இளைஞர் சக்தி தான் இந்தியாவின் பலம் எனவும், அவர்களால் தான் உலகின் முதல் 5 பொருளாதார நாடுகளில் ஒன்றாக நமது தேசம் திகழ்கிறது என நாசிக்கில் தேசிய இளைஞர் திருவிழாவை துவக்கி வைத்து பிரதமர் மோடி கூறியுள்ளார்.பேரணி
அரசு முறை பயணமாக மஹாராஷ்டிரா வந்த பிரதமர் மோடிக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து ஓட்டல் மிர்ச்சி சவுக்கில் இருந்து சுவாமி மஹாராஜ் சவுக் வரை சாலை மார்க்கமாக பேரணியாக சென்றார். அவருடன் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, துணை முதல்வர்கள் தேவேந்திர பட்னாவிஸ், அஜித் பவார் மற்றும் பா.ஜ., தலைவர்கள் சென்றனர். வழிநெடுகிலும் ஏராளமான கட்சி தொண்டர்கள் உற்சாகமாக மோடியை வரவேற்றனர். மோடியை வரவேற்க, கலைநிகழ்ச்சிகள், பாரம்பரிய நடன நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த பேரணி சுமார் 35 நிமிடங்கள் நடந்தது.வழிபாடு
பின்னர், கோதாவரி நதிக்கரையில் அமைந்துள்ள ராம்குந்திற்கு சென்ற மோடியை, ஊழியர்கள் வரவேற்றனர். அங்கு பூஜை செய்து, ஆரத்தி காண்பித்து வழிபாடு நடத்தினார். பிறகு மடாதிபதிகளையும் சந்தித்து பேசினார். தொடர்ந்து, பஞ்சவடி பகுதியில் உள்ள காலாராம் கோயிலிலும் பிரதமர் வழிபாடு நடத்தி பிரார்த்தனை செய்தார்.தூய்மைப்பணி
பிறகு நாஷிக்கில் 27 வது தேசிய இளைஞர் திருவிழாவை துவக்கி வைத்து பிரதமர் மோடி பேசியதாவது: 
மஹாராஷ்டிரா மாநிலம் பல்வேறு வரலாற்று சிறப்புமிக்க நபர்களுடன் தொடர்புடையது. கடவுள் ராமர், பஞ்சவடி பகுதியில் தங்கியிருந்தார். ராமர் கோயில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, கோயில், வழிபாட்டு தலங்களில் தூய்மைப்பணியை மேற்கொள்ள வேண்டும் என மக்களுக்கு வேண்டுகோள் விடுக்கிறேன். இளைஞர் சக்தி காரணமாக, இந்தியா முதல் 5 பொருளாதார நாடுகளில் ஒன்றாக உள்ளது. இந்த சக்தி தான் நமது பலம். விரைவில் நாம், 3வது பெரிய பொருளாதாரமாக மாறுவோம். திறமையான தொழிலாளர்களை கொண்ட நாடாக இந்தியாவை உலகம் பார்க்கிறது. இந்தியாவில் குறைந்த விலையில் இணைய சேவை கிடைப்பது உலக மக்களை ஆச்சர்யத்தில் ஆழ்த்தி உள்ளது. யோகா மற்றும் ஆயுர்வேதத்தின் தூதர்களாக இந்திய இளைஞர்கள் மாறி உள்ளனர். இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.




      Our Apps Available On




      Dinamalar

      Follow us