முருங்கை தோல் நீக்கும் இயந்திரம்: வேளாண் பல்கலைக்கு காப்புரிமை

UPDATED : ஜன 12, 2024 12:00 AM
ADDED : ஜன 12, 2024 05:18 PM
கோவை:
தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கு, முருங்கை விதை தோல் நீக்கும் இயந்திரத்திற்கான வடிவமைப்பு காப்புரிமையை, மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் காப்புரிமைகள், வடிவமைப்பு கட்டுப்பாட்டாளர் தலைமை அலுவலகத்தால் வழங்கப்பட்டுள்ளது.சர்வதேச அளவில் முருங்கை சார்ந்த அனைத்து பொருட்களுக்கும் தேவை அதிகரித்துள்ளது. முருங்கை விதையில் இருந்து எண்ணெய் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில், விதை தோல் நீக்குவதில் உற்பத்தியாளர்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்கின்றனர். நேர விரயம் மற்றும் ஆட்கள் கூலி அதிகரிக்கிறது.இதற்கு தீர்வு காணும் வகையில், வேளாண் பொறியியல் கல்லுாரி ஆராய்ச்சி நிலைய உணவு பதன் செய்முறை துறை முதுநிலை மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களால், தோல் நீக்கும் பிரத்யேக இயந்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இயந்திரத்திற்கான வடிவமைப்பு காப்புரிமையை தற்போது பெற்றுள்ளனர். இவர்களை, துணைவேந்தர் கீதாலட்சுமி பாராட்டி வாழ்த்துக்களை தெரிவித்தார். இதுகுறித்து, பேராசிரியர் அமுதசெல்வி கூறுகையில்,முருங்கை தோல் நீக்கும் இயந்திரத்திற்கான வடிவமைப்பு காப்புரிமையை பெற்றுள்ளோம். கடந்த எட்டு மாதங்களில் மாணவர்கள் ஒருங்கிணைந்து இயந்திரத்தையும் உருவாக்கியுள்ளனர். உராய்வு வாயிலாக முருங்கை விதை தோல் நீங்கும் வகையில் இயந்திரம் செயல்படும். இதனை அடுத்து வணிகப்படுத்தும் வகையில் திட்டமிட்டுள்ளோம், என்றார்.