/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/விக்டோரியா கல்லுாரியில் நாளை தேசிய கருத்தரங்குவிக்டோரியா கல்லுாரியில் நாளை தேசிய கருத்தரங்கு
விக்டோரியா கல்லுாரியில் நாளை தேசிய கருத்தரங்கு
விக்டோரியா கல்லுாரியில் நாளை தேசிய கருத்தரங்கு
விக்டோரியா கல்லுாரியில் நாளை தேசிய கருத்தரங்கு
ADDED : ஜன 11, 2024 10:16 PM
பாலக்காடு:பாலக்காடு அரசு விக்டோரியா கல்லுாரியில் தேசிய அளவிலான கருத்தரங்கு நாளை நடக்கிறது.
கேரள மாநிலம், பாலக்காடு அரசு விக்டோரியா கல்லுாரி தமிழ் துறை சார்பில், திருவள்ளுவர் அரங்கில் பாரதியார் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு, கேரள மாநில மொழி சிறுபான்மை தமிழாசிரியர் சங்கத்துடன் இணைந்து தேசிய அளவிலான கருத்தரங்கு நாளை (13ம் தேதி) நடக்கிறது.
'வீழ்வேன் என்று நினைத்தாயோ' என்று இந்த கருத்தரங்குக்கு பெயர் சூட்டியுள்ளனர். கருத்தரங்கை முனைவர் ராஜாராம் துவக்கி வைக்கிறார். கல்லுாரி தமிழ் துறை தலைவர் முனைவர் ரவி தலைமை வகிக்கிறார்.
அவிநாசி அரசு அறிவியல் மற்றும் கலை கல்லூரி முனைவர் மணிவண்ணன் சிறப்புரையாற்றுகிறார்.