மாணவர்களிடம் ஆபாச புத்தகம், மொபைல்போன் : முதன்மை கல்வி அலுவலர் ஆய்வில் அதிர்ச்சி
மாணவர்களிடம் ஆபாச புத்தகம், மொபைல்போன் : முதன்மை கல்வி அலுவலர் ஆய்வில் அதிர்ச்சி
மாணவர்களிடம் ஆபாச புத்தகம், மொபைல்போன் : முதன்மை கல்வி அலுவலர் ஆய்வில் அதிர்ச்சி

பரமக்குடி : ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி கல்வி மாவட்டத்தில் பார்த்திபனூர், பரமக்குடி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடம் ஒழுங்கு நடவடிக்கை குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
பரமக்குடி, பார்த்திபனூர் பள்ளிகளில் நடத்தப்பட்ட ஆய்வில் மாணவர்களிடம் ஆபாச புத்தகம் மற்றும் மொபைல் போன்கள் இருந்தன. மேலும் பல கலரில் பெல்ட்கள், ஜாதி பெயர் குறிப்பிட்ட பனியன்கள், கை காப்புகள், ரப்பர் பேண்ட்கள், போதை பாக்குகள் இருந்ததுடன், பட்டன் அணியாமலும், எண்ணெய் தேய்க்காமல் வருவது குறித்தும் கண்டிக்கப்பட்டது. இவர்களிடம், இனிமேல் ஒழுங்காக பள்ளிக்கு வருவேன் என்றும், ஒழுங்கீனமாக நடந்து கொண்டால் என் மீது நடவடிக்கை எடுக்கலாம் என்று எழுதி கையொப்பம் பெற பட்டது.
முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் கூறியதாவது: ஒழுங்கீனமான செயல்களில் ஈடுபடும் மாணவர்களை பெற்றோர் கண்காணிக்க வேண்டும். தொடர்ந்து 20 நாட்களுக்கு ஒரு முறை மாணவனின் வருகை, ஒழுங்கீனம், பள்ளியில் முழு நேரம் இருக்கின்றாரா என்பதை கண்காணிக்க தலைமை ஆசிரியர்களிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது.