தொகுதி மறுசீரமைப்பு குறித்து மாநிலங்களுடன் பேசுங்க: மத்திய அரசுக்கு கேரளா முதல்வர் வலியுறுத்தல்
தொகுதி மறுசீரமைப்பு குறித்து மாநிலங்களுடன் பேசுங்க: மத்திய அரசுக்கு கேரளா முதல்வர் வலியுறுத்தல்
தொகுதி மறுசீரமைப்பு குறித்து மாநிலங்களுடன் பேசுங்க: மத்திய அரசுக்கு கேரளா முதல்வர் வலியுறுத்தல்

இந்தியாவின் பலம்
சென்னையில் நடந்த தொகுதி மறுசீரமைப்பு தொடர்பான கூட்டுக்குழு கூட்டத்தில் கேரளா முதல்வர் பினராயி விஜயன் பேசியதாவது: இந்தியாவின் பலம். மத்திய அரசு மாநிலங்களுடன் அர்த்தமுள்ள பேச்சுவார்த்தையை தொடங்க வேண்டும். எண்ணிக்கை மட்டுமல்ல.
போராடுவோம்
கூட்டத்தில் தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி பேசியதாவது: கட்சி வேறுபாடுகளை களைந்து போராடுவோம். மக்கள் தொகை கட்டுப்பாட்டில் சிறப்பாக செயல்பட்டதற்கு தண்டனை தான் தொகுதி மறுசீரமைப்பு. டில்லியில் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
நவீன் பட்நாயக் பேச்சு
கூட்டத்தில் வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக ஒடிசா முன்னாள் முதல்வர் நவீன் பட்நாயக் பேசியதாவது: மக்கள் தொகை அடிப்படையில் தொகுதி மறுசீரமைப்பு செய்தால் லோக்சபா தொகுதிகளை ஒடிசா இழக்கும். இது, மக்கள் தொகையை கட்டுப்படுத்திய மாநிலங்களுக்கு இழைக்கப்படும் அநீதி. அதை எதிர்த்து பிஜூ ஜனதாதளம் போராடும்.
பெயர்ப்பலகை
கூட்டத்தில் பங்கேற்ற தலைவர்களின் பெயர்களை, அவர்களது இருக்கை முன் அவரவர் தாய்மொழி மற்றும் ஆங்கிலத்தில் குறிப்பிட்டு பெயர்ப்பலகை இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.