ADDED : ஜன 12, 2024 06:44 AM

ஐந்து பேர் கைது
கொட்டாம்பட்டி: தேவகோட்டை அழகப்பன் 50, கொட்டாம்பட்டி, சொக்கம்பட்டி பகுதியில் காவிரி கூட்டுக் குடிநீர் குழாய்களை பதிக்கும் ஒப்பந்தம் எடுத்திருந்தார். இப்பகுதியில் பதிப்பதற்காக வைத்திருந்த 300 இரும்பு குழாய்களை நிறுவனத்தில் பணிபுரிந்தவர்கள் திருடியதால் புகார் கொடுத்தார். கொட்டாம்பட்டி இன்ஸ்பெக்டர் சாந்தி மதுரை, நத்தம் பட்டூரை சேர்ந்த சரவணன் 31. ரஞ்சித் 30, சங்கர்தாஸ் 28, சக்திவேல் 34. சக்தி 32, ஆகிய 5 பேரை கைது செய்து கிரேனை பறிமுதல் செய்தனர்.
மின்சாரம் தாக்கி பக்தர் பலி
மேலுார்: கீழவளவு கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜா 55, பெங்களூரில் டீ மாஸ்டராக வேலை பார்த்தார். ஜன.6 ல் சபரி மலைக்கு வேனில் சென்றவர் நேற்று காலை கீழவளவு திரும்பினார். சாமி கும்பிட்ட பிறகு வீட்டிற்கு போக எண்ணியவர் விநாயகர் கோயிலில் சாமி கும்பிட்டார். கோயிலுக்கு வெளியே கம்பியில் போட்டிருந்த பந்தலை தொட்டபோது அறுந்து தொங்கிய ஒயர் கையில் பட்டு மின்சாரம் தாக்கி இறந்தார். இன்ஸ்பெக்டர் மன்னவன் விசாரிக்கிறார்.
ஓட்டை பிரித்து நகை திருட்டு
மேலுார் : மேலுார் சாந்தி 62, அரசு மருத்துவமனைஅருகே வசிக்கிறார். ஜன.8 அன்று சொக்கம்பட்டியில் அண்ணன் வீட்டிற்கு சென்றவர் நேற்று வீடு திரும்பினார். அவரது வீட்டின் ஓடுகள் பிரிக்கப்பட்டு பீரோவில் இருந்த 20 கிராம் நகை, ரூ. 3 ஆயிரம் திருடு போனது தெரிந்தது. எஸ்.ஐ., சுப்புலெட்சுமி விசாரிக்கிறார்.