/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/தி.மு.க., அரசு மீது நடவடிக்கை எடுங்க ஹிந்து மக்கள் கட்சி கவர்னருக்கு மனுதி.மு.க., அரசு மீது நடவடிக்கை எடுங்க ஹிந்து மக்கள் கட்சி கவர்னருக்கு மனு
தி.மு.க., அரசு மீது நடவடிக்கை எடுங்க ஹிந்து மக்கள் கட்சி கவர்னருக்கு மனு
தி.மு.க., அரசு மீது நடவடிக்கை எடுங்க ஹிந்து மக்கள் கட்சி கவர்னருக்கு மனு
தி.மு.க., அரசு மீது நடவடிக்கை எடுங்க ஹிந்து மக்கள் கட்சி கவர்னருக்கு மனு
ADDED : ஜன 12, 2024 12:32 AM

ராமநாதபுரம் : தி.மு.க., தேர்தலின் போது சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. திறனற்ற இந்த ஆட்சி மீது கவர்னர் ரவி நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஹிந்து மக்கள் கட்சி வலியுறுத்தியுள்ளது.
ராமநாதபுரம் ஹிந்து மக்கள் கட்சி மாவட்ட தலைவர் கண்ணதாசன் தலைமையில் கலெக்டர் விஷ்ணுசந்திரன் வழியாக கவர்னர் ரவிக்கு மனு அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:
தி.மு.க., அரசு புயல், மழை, வெள்ள ஆபத்துக்களில் இருந்து மக்களை காப்பாற்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கவில்லை. ஆட்சிக்கு வந்தவுடன் பூரண மதுவிலக்கு கையொப்பம் மற்றும் நீட் விலக்கு போன்ற ஏராளமான வாக்குறுதிகளை கொடுத்து இன்று வரை நிறைவேற்றவில்லை. திறனற்றதி.மு.க., அரசு மீது கவர்னர் ரவி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியுள்ளனர்.
தென் மண்டல செயலாளர் கருணாகரன், மாவட்ட அமைப்பாளர் முனியசாமி, மாவட்ட பொருளாளர் செந்தில், ஒன்றிய இளைஞரணி தலைவர் நந்தகோபால் உட்பட பலர் பங்கேற்றனர்.