/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/கே.எம்.சி.எச்., பேலியேட்டிவ் கேர்மையத்தில் சிறப்பு பராமரிப்புகே.எம்.சி.எச்., பேலியேட்டிவ் கேர்மையத்தில் சிறப்பு பராமரிப்பு
கே.எம்.சி.எச்., பேலியேட்டிவ் கேர்மையத்தில் சிறப்பு பராமரிப்பு
கே.எம்.சி.எச்., பேலியேட்டிவ் கேர்மையத்தில் சிறப்பு பராமரிப்பு
கே.எம்.சி.எச்., பேலியேட்டிவ் கேர்மையத்தில் சிறப்பு பராமரிப்பு
ADDED : ஜன 11, 2024 10:21 PM

'கே.எம்.சி.எச்., பேலியேட்டிவ் கேர் மையத்தில், 50 படுக்கை வசதி உள்ளது. பயிற்சி பெற்ற செவிலியர்கள், உதவியாளர் வாயிலாக நோயாளிகளை சிறந்த முறையில் பராமரித்து வருகிறோம்,' என, கோவை மெடிக்கல் சென்டர் மருத்துவமனை பேலியேட்டிவ் கேர் மைய மருத்துவ ஆலோசகர் டாக்டர்.ஹர்ஷா சிங் தெரிவித்தார்.அவர் கூறியதாவது:
பேலியேட்டிவ் கேர் என்பது, தீவிர மற்றும் தீராத நோயால் அவதிப்படுவோரை, அரவணைத்து தேவையான மருத்துவம் மற்றும் உளவியல் சிகிச்சை அளிப்பதாகும். படுத்த படுக்கையாக உள்ள நோயாளிகள் மற்றும் முதியவர்கள் நிம்மதியாகவும் சவுகரியமாகவும் தங்களுடைய இறுதிக்காலத்தை கழிக்கவேண்டும் என்பதே இதன் நோக்கமாகும்.
புற்றுநோய், கல்லீரல் நோய், பக்கவாதம், படிப்படியாக தீவிரமாகும் நரம்பு சம்பந்தப்பட்ட பிரச்சினைகள், தண்டுவட மரபு நோய், தசைக்களைப்பு நோய், நாட்பட்ட நுரையீரல் அடைப்பு நோய், இருதய செயலிழப்பு, பார்கின்சன், அல்சைமர் மற்றும் டிமென்சியா, எச்ஐவி/எய்ட்ஸ் முதலான நோய்கள் உள்ளவர்களுக்கும் முதுமைப்பருவ உடல் நலக்குறைபாடுகள் மற்றும் அடிக்கடி தவறி கீழே விழுந்து விடுபவர்களுக்கும் பேலியேட்டிவ் கேர் தேவைப்படும். இந்த பராமரிப்பு சிகிச்சை முறையால் நோயாளிகள் வலி மற்றும் மன அழுத்தத்தில் இருந்து விடுபடலாம்; துாக்கத்தின் தரம் மேம்படும்.
மீதமிருக்கும் வாழ்நாளை எதிர்கொள்ளும் ஆற்றல் அதிகரிக்கும். தங்களது உடல் நிலை குறித்தும் மருத்துவ தேர்வுகள் பற்றியும் நன்கு அறிந்துகொள்ளலாம். உளவியல் ஆலோசனையும் பெறலாம்.
கே.எம்.சி.எச்., பேலியேட்டிவ் கேர் மையத்தில், இதற்கான அனைத்து வசதியும் உள்ளது. பயிற்சி பெற்ற செவிலியர்கள், உதவியாளர்கள் உள்ளனர்.
நோயாளிகளுக்கு தேவையான அனைத்து மருத்துவ மற்றும் உளவியல் சார்ந்த சிகிச்சை அளித்து வருகிறோம்.மேலும் விவரங்களுக்கு 733 9333 485 என்ற மொபைல் போன் எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு, அவர் கூறினார்.