/உள்ளூர் செய்திகள்/திருப்பூர்/நண்பரை கொலை செய்த தொழிலாளிக்கு சிறைநண்பரை கொலை செய்த தொழிலாளிக்கு சிறை
நண்பரை கொலை செய்த தொழிலாளிக்கு சிறை
நண்பரை கொலை செய்த தொழிலாளிக்கு சிறை
நண்பரை கொலை செய்த தொழிலாளிக்கு சிறை
ADDED : ஜன 12, 2024 12:24 AM
திருப்பூர்;தஞ்சையைச் சேர்ந்தவர் சின்ராஜ், 30. தேனியைச் சேர்ந்தவர் ராஜ்குமார், 30. இருவரும், திருப்பூர் பாண்டியன் நகரில் தங்கி, பனியன் நிறுவனத்தில் ஒன்றாக வேலை செய்து வந்தனர்.
இருவரும் அடிக்கடி சேர்ந்து மது அருந்துவது வழக்கம்.கடந்த 2021 ஏப்., 30ல், இருவரும் மது போதையில் தங்களுக்குள் தகராறில் ஈடுபட்டனர்.
தகராறு முற்றிய நிலையில், ராஜ்குமார் கத்தியால் குத்தியதில், சின்ராஜ் உயிரிழந்தார். திருமுருகன்பூண்டி போலீசார் வழக்கு பதிந்து, ராஜ்குமாரை கைது செய்தனர்.இவ்வழக்கு திருப்பூர் சிறப்பு கோர்ட்டில் நீதிபதி சொர்ணம் நடராஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
அரசு தரப்பில் சிறப்பு அரசு வக்கீல் மனோகரன் ஆஜரானார். இதில், ராஜ்குமாருக்கு ஏழாண்டு கடுங்காவல் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பளிக்கப்பட்டது. தீர்ப்புக்குப் பின் அவர் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.