Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/தமிழகத்தில் பசுந்தீவனத்திற்கு தட்டுப்பாடு: அமைச்சர் பேட்டி

தமிழகத்தில் பசுந்தீவனத்திற்கு தட்டுப்பாடு: அமைச்சர் பேட்டி

தமிழகத்தில் பசுந்தீவனத்திற்கு தட்டுப்பாடு: அமைச்சர் பேட்டி

தமிழகத்தில் பசுந்தீவனத்திற்கு தட்டுப்பாடு: அமைச்சர் பேட்டி

ADDED : ஜன 12, 2024 12:45 AM


Google News
காரைக்குடி:''தமிழகத்தில் பசுந்தீவனம் தட்டுப்பாடு 40 சதவீதம் உள்ளது'' என அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் தெரிவித்தார்.

காரைக்குடி அருகே செட்டிநாடு கால்நடை பண்ணையில் மீன்வள, மீனவர் நலத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன், கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் ஆய்வு செய்தனர். கலெக்டர் ஆஷா அஜித் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் கூறியதாவது:

தமிழகத்தில் பசுந்தீவனம் தட்டுப்பாடு 40 சதவீதம் உள்ளது. அதனைக் குறைக்க வேண்டும் என்றால் இங்குள்ள இடங்களை மகளிர் சுய உதவி குழுவிடம் கொடுத்து அவர்களே புற்களை உற்பத்தி செய்யவும், அதில் பண்ணையை சேர்ந்தவர்களுக்கு ஒரு பங்கும், மகளிர் சுய உதவி குழுவிற்கு ஒரு பங்கும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்ற வகையில் ஆலோசிக்கப்பட்டுள்ளது. புதிய மாடுகளை வாங்கி பால் உற்பத்தியை அதிகப்படுத்த நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

தமிழக மீனவர்களை இலங்கை கடற்படை கைது செய்வது வாடிக்கையாக உள்ளது. இதனை முதல்வர் வெளியுறவுத்துறை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்று உடனடியாக படகுகளையும், மீனவர்களையும் மீட்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றார். மீனவர்களை மட்டும் விடுவித்து விட்டு படகுகளை விடுவிப்பதில்லை. ஆனால் மத்திய அமைச்சர்கள் இங்கு வரும்போது கச்சத்தீவை நாங்கள் மீட்டு தந்து விடுவோம், படகுகளை மீட்டுத் தந்து விடுவோம் என்று வாக்குறுதி அளிக்கின்றனர். கச்சத்தீவை மத்திய அரசு தான் மீட்க வேண்டும். நாங்கள் ஆட்சிக்கு வந்த போது கால்நடை மருத்துவமனைகளில் மருத்துவர்களே இல்லை.

உடனடியாக ஆயிரத்து 400 கால்நடை மருத்துவர்களை பணியில் அமர்த்தினோம். தற்போது டி.என்.பி. எஸ்.சி., மூலம் 700 மருத்துவர்கள் தேர்வாகியுள்ளனர். நீதிமன்றத்தில் வழக்கு உள்ளது. அது சரியான பிறகு பணியமர்த்தப்படுவர் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us