/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மஞ்சுவிரட்டு காளைகளுக்கு தயாரான அலங்கார கயிறுமஞ்சுவிரட்டு காளைகளுக்கு தயாரான அலங்கார கயிறு
மஞ்சுவிரட்டு காளைகளுக்கு தயாரான அலங்கார கயிறு
மஞ்சுவிரட்டு காளைகளுக்கு தயாரான அலங்கார கயிறு
மஞ்சுவிரட்டு காளைகளுக்கு தயாரான அலங்கார கயிறு
ADDED : ஜன 12, 2024 12:20 AM

சிங்கம்புணரி : சிங்கம்புணரியில் மஞ்சுவிரட்டு காளைகளுக்கு தேவையான பலவண்ண கயிறு விற்பனை களைகட்ட துவங்கி உள்ளது.
ஆண்டு முழுவதும் விவசாயிகளுடன் ஒட்டி உறவாடி விவசாய பணிகளில் உடனிருந்து உதவி செய்யும் மாடுகளுக்கு மாட்டுப் பொங்கல் தினத்தன்று ராஜமரியாதை தான். மாடுகளை அன்றைய தினம் விவசாயிகள் குளிப்பாட்டி அலங்கரித்து புது வண்ண கயிறுகளால் அழகு பார்ப்பர். வீடுகள், தொழுவங்கள் முன்பு மாடுகளுக்கு பொங்கல் வைத்து அதை சூரியனுக்கு படைத்து மாடுகளுக்கும் வழங்குவர். இம்மாடுகளுக்கு பயன்படுத்தப்படும் கயறு விற்பனை சிங்கம்புணரியில் களைகட்ட துவங்கியுள்ளது.
ராஜ்குமார், கயிறு வியாபாரி; காளைகளுக்கு மேலப்பாளையம் கயிறு, பாங்கா கயிறு வகை அதிக அளவில் விற்பனை செய்யப்படுகிறது. மேலப்பாளையம் கயிறு ரூபாய் 300க்கும், பாங்கா கயிறு ரூபாய் 200 லிருந்தும் விற்பனை செய்யப்படுகிறது. காளைகளுக்கு அணியும் நெற்றிப் பாறை கயிறு, இழுவை கயிறு கலர் பொடிகளையும் விவசாயிகள் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.
மாடுகளுக்கு மூக்கில் காயத்தை ஏற்படுத்தாமல் இருக்க ஜியோ டியூப் என்று அழைக்கப்படும் கயிறு வகைகளை விற்பனைக்கு வைத்துள்ளோம். இதனை காளை வளர்ப்போர் ஆர்வமுடன் வாங்கி செல்கின்றனர்.