ADDED : ஜன 12, 2024 06:43 AM

உசிலம்பட்டி : உசிலம்பட்டி ஊராட்சி ஒன்றியம் நடுப்பட்டி ஊராட்சியில் உள்ள வெள்ளைமலைப்பட்டி கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பாக நேற்று ஊராட்சி நிர்வாகம் சார்பில் குப்பை அகற்றும் பணி நடந்தது.
அப்போது மண்அள்ளும் இயந்திரம் மூலம் அந்தப் பகுதியில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக வளர்ந்த அரசமரம் உள்ளிட்டவற்றையும் வேரோடு பிடுங்கி சாய்த்தனர்.
நன்கு வளர்ந்த மரங்களை அனுமதி இல்லாமல் பிடுங்கி எறிந்த ஊராட்சி நிர்வாகம் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கிராமத்து இளைஞர்கள் உசிலம்பட்டி ஆர்.டி.ஓ., தாசில்தார் மற்றும் போலீசில் புகார் செய்தனர்.