/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சமூக வலைதள புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கைசமூக வலைதள புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை
சமூக வலைதள புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை
சமூக வலைதள புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை
சமூக வலைதள புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை
ADDED : ஜன 12, 2024 12:39 AM
விருதுநகர் : விருதுநகர் மாவட்ட நிர்வாகத்தின் சமூக வலை தள கணக்கில் தெரிவிக்கப்படும் அடிப்படை வசதி தொடர்பான புகார்களுக்கு உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இன்டர்நெட் வசதி பெருகியுள்ள நிலையில் அனைத்து தரப்பு மக்களும் ஸ்மார்ட் போன் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் மனுவாக புகார் அளிக்கும் நடைமுறை ஒரு பக்கம் பின்பற்றப்பட்டு, அதற்கு தீர்வு காணப்பட்டு வந்தாலும் சமூக வலைதளங்களில் கலெக்டரின் தனிப்பட்ட கணக்கு, மாவட்ட நிர்வாகத்தின் கணக்கில் புகார் அளித்தாலும் உடனுக்குடன் தீர்வு காணப்படுகிறது.
அந்த வகையில் விருதுநகர் செந்நெல்குடி அரசு உயர்நிலைப்பள்ளியில் மழை பெய்து மெயின் ரோட்டில் இருந்து பள்ளிக்கு செல்லும் வரை உள்ள மண் பாதை மாணவர்கள் பயன்படுத்த முடியாத நிலையில் இருந்தது. இதை ஒருவர் புகார் கூறி மாவட்ட நிர்வாகத்தின் சமூக வலைதள கணக்கை 'டேக்' செய்தார். இதையடுத்து ஒரே நாளில் கிராவல் கொட்டி போக்குவரத்துக்கு ஏற்றது போல் மாற்றப்பட்டுள்ளது. கலெக்டர் ஜெயசீலனின் இந்த நடவடிக்கை மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ளது.