/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/வெள்ள நிவாரணம் வழங்குவதற்கு முறையான கணக்கெடுப்பில்லைவெள்ள நிவாரணம் வழங்குவதற்கு முறையான கணக்கெடுப்பில்லை
வெள்ள நிவாரணம் வழங்குவதற்கு முறையான கணக்கெடுப்பில்லை
வெள்ள நிவாரணம் வழங்குவதற்கு முறையான கணக்கெடுப்பில்லை
வெள்ள நிவாரணம் வழங்குவதற்கு முறையான கணக்கெடுப்பில்லை
ADDED : ஜன 12, 2024 12:11 AM
திருவாடானை, : திருவாடானை தாலுகாவில் வெள்ள நிவாரணம் கணக்கெடுப்பு முறையாக நடக்கவில்லை என விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
திருவாடானை தாலுகாவில் இந்த ஆண்டு பருவமழை அதிகமாக பெய்ததால் பெரும்பாலான வயல்களில் மழை நீர் தேங்கி விவசாயம் பாதிக்கப்பட்டது.
பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் வழங்க வேண்டும் என்று விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.
அதனை தொடர்ந்து வெள்ள நிவாரண கணக்கெடுப்பு பணிகள் துவங்கப்பட்டது. ஆனால் முறையான கணக்கெடுப்பு நடக்கவில்லை என்று விவசாயிகள் குற்றம் சாட்டினர்.
இது குறித்து திருவாடானை, ஆர்.எஸ்.மங்கலம் விவசாயிகள் ஒருங்கிணைப்பு குழு கவாஸ்கர் கூறியதாவது:
இரு தாலுகாக்களிலும் வெள்ள நிவாரணக் கணக்கெடுப்பு பணிகள் முறையாக நடக்கவில்லை. குறிப்பிட்ட சில கிராமங்களில் மட்டும் கணக்கெடுக்கப்பட்டு அரசுக்கு அறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.
இந்நிலையில் அரசால் வெள்ள நிவாரணம் வழங்கும் பட்சத்தில் ஏராளமான விவசாயிகள் விடுபட வாய்ப்பு உள்ளது.
வருவாய்த்துறை அதிகாரிகளை கேட்டால் நீர்ப்பிடிப்பு வயல்களை கணக்கெடுக்க வேண்டாம் என்ற உத்தரவு உள்ளது. ஆகவே அந்த நிலங்களை எடுக்கவில்லை என்று தெரிவிக்கின்றனர். மொத்தத்தில்முறையான கணக்கெடுப்பு இல்லை. சில நாட்களுக்கு முன்பு எம்.எல்.ஏ.,எம்.பி., மற்றும் அதிகாரிகள் பாதிக்கப்பட்ட நிலங்களை பார்வையிட்டனர்.
அப்போது அவர்களிடம், பெரும்பாலான கிராமங்கள் பாதிக்கப்பட்டது குறித்து தகவல் தெரிவித்தோம். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு வெள்ள நிவாரணம் கிடைக்காத பட்சத்தில் போராட்டம் நடத்தப்படும் என்றார்.