பிரபை என்ற சொல்லுக்கு பிரகாசம், ஒளி என்று பொருள். கருவறையில் காணப்படும் சுவாமியின் பின்புறம் அரை வட்டத்துடன் கூடிய அலங்கார திருவாசி காணப்படும். இதனை சூரிய பிரபை என்பர். கோயில்களில் உற்ஸவர் ரத வீதிகளில் வலம் வரும் வாகனங்களில் சூரிய, சந்திர பிரபை வாகனங்கள் முக்கிய இடம் பெறுகின்றன. கோயில்களில் கொடி ஏற்றப்பட்டு நடைபெறும் பிரமோற்ஸவத்தில் ஏழாம் நாள் அன்று சூரிய பிரபையில் சுவாமியும், சந்திர பிரபையில் அம்பாளும் வலம் வருவர். திருப்பதி, ஸ்ரீரங்கம், திருவாரூர், காஞ்சிபுரம், சிதம்பரம், மயிலாப்பூர் போன்ற தலங்களில் பிரம்மோற்ஸவத்தில் சூரிய பிரபையில் சுவாமியை தரிசனம் செய்யலாம். தொடர்ந்து ஏழு முறை சூரிய பிரபையில் தரிசனம் செய்பவர்களுக்கு நீண்ட ஆயுள், வற்றாத செல்வம், தீர்க்கமான ஆளுமை, மங்காத புகழ், அரசால் அனுகூலம் போன்றவை ஏற்படும்.