/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/புதுச்சேரியில் ரஜினி படப்பிடிப்பு: ரசிகர்கள் திரண்டதால் பரபரப்புபுதுச்சேரியில் ரஜினி படப்பிடிப்பு: ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு
புதுச்சேரியில் ரஜினி படப்பிடிப்பு: ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு
புதுச்சேரியில் ரஜினி படப்பிடிப்பு: ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு
புதுச்சேரியில் ரஜினி படப்பிடிப்பு: ரசிகர்கள் திரண்டதால் பரபரப்பு
ADDED : ஜன 12, 2024 07:08 AM

புதுச்சேரி : புதுச்சேரி தேங்காய்திட்டு பழைய துறைமுக வளாகத்தில் நடிகர் ரஜினி நடிக்கும் வேட்டையன் சினிமா படப்பிடிப்பு துவங்கி நடந்து வருகிறது.
ஜெயிலர் படத்திற்கு பிறகு ஞானவேல் இயக்கும் வேட்டையன் என்ற படத்தில் நடிகர் ரஜினி நடித்து வருகிறார். அவரது 170-வது படமான இதில் இந்தி நடிகர் அமிதாப்பச்சன், பகத்பாசில், ராணா, மஞ்சு வாரியர், ரித்திகா சிங், துஷாரா விஜயன் உட்பட பலர் நடிக்கின்றனர். அனிருத் இசை அமைக்கும் இந்த படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது.
இதன் முதற்கட்ட படப்பிடிப்பு திருவனந்தபுரம், திருநெல்வேலி, மும்பையில் நடந்தது. அடுத்தக்கட்ட படப்பிடிப்பு புதுச்சேரி தேங்காய் திட்டு பழைய துறைமுக வளாகத்தில் துவங்கி நடந்து வருகின்றது.
நேற்று ரஜினி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டது. அதற்காக புதுச்சேரி நட்சத்திர ஹோட்டலில் தங்கி இருந்த ரஜினி பட ஷூட்டிங்கில் பங்கேற்றார்.
ஷூட்டிங்கில் கலந்து கொண்ட அவரை காண ஏராளமான ரசிகர்கள் திரண்டனர். அவர்களுக்கு ரஜினி கைகுலுக்கியும் கையை அசைத்தபடியும் சென்றார். தொடர்ந்து நான்கு நாட்கள் ரஜினி நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட உள்ளன.