/உள்ளூர் செய்திகள்/நீலகிரி/பட்டா மாற்ற ரூ.40,000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ. கைதுபட்டா மாற்ற ரூ.40,000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ. கைது
பட்டா மாற்ற ரூ.40,000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ. கைது
பட்டா மாற்ற ரூ.40,000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ. கைது
பட்டா மாற்ற ரூ.40,000 லஞ்சம் பெற்ற வி.ஏ.ஓ. கைது
ADDED : ஜன 12, 2024 12:34 AM

கடலுார்:கடலுார் அடுத்த கீழ்அழிஞ்சிப்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சீனு, 43, விவசாயி. இவர், தன் விவசாய நிலத்திற்கு பட்டா மாற்றம் செய்ய, கடந்த மாதம் ஆன்லைனில் விண்ணப்பித்தார். பின், மதலப்பட்டு வி.ஏ.ஓ., பிரபாகரனை அணுகினார்.
அந்த வேலைக்கு, 1 லட்சம் ரூபாய் லஞ்சமாக வி.ஏ.ஓ., கேட்டார். லஞ்சம் தர முன்வராத சீனு, கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் அளித்தார். போலீசார் அறிவுரை படி, 40,000 ரூபாயை வி.ஏ.ஓ., பிரபாகரனை அவரது அலுவலகத்தில் நேற்று மதியம் சந்தித்து சீனு கொடுத்தார். அப்போது, மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், வி.ஏ.ஓ., பிரபாகரனை கைது செய்தனர்.
பின், கடலுார் தாசில்தார் அலுவலகத்திற்கு அவரை அழைத்து வந்து விசாரணை நடத்தினர். இதையடுத்து, கடலுார் லஞ்ச ஒழிப்பு போலீசார் வழக்கு பதிந்து, பிரபாகரனை சிறையில் அடைத்தனர்.