ADDED : ஜன 12, 2024 01:04 AM
எம்.ஜி.ஆர்., நகர், மேற்கு ஜாபர்கான்பேட்டை, பாலகிருஷ்ணன் தெருவின் சாலையோரம், கடந்த 9ம் தேதி, மதுபோதையில் ஒருவர் மயங்கிய நிலையில் இருப்பதாக, 108 ஆம்புலன்சிற்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து, அங்கு சென்ற ஆம்புலன்ஸ் ஊழியர்கள் பரிசோதனை செய்து, முதல் உதவி அளித்து, கே.கே., நகர் மருத்துவமனையில் அனுமதித்தனர். பின், மேல் சிகிச்சைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஜாபர்கான்பேட்டை அன்னை சத்யா நகர் பகுதியை சேர்ந்த வீரமுத்து, 48, என விசாரணையில் தெரிந்தது.
சிகிச்சை பெற்று வந்த அவர், நேற்று முன்தினம் இரவு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.